Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முக கருமை நீங்க எளிய வழி இதோ!! ட்ரை பண்ணுங்க தீர்வு நிச்சயம்!!

#image_title

முக கருமை நீங்க எளிய வழி இதோ!! ட்ரை பண்ணுங்க தீர்வு நிச்சயம்!!

பொதுவாக பெண்களுக்கு வெள்ளையாக வேண்டுமென்ற ஆசை இருக்கும்.கடவுள் கொடுத்த இயற்கை நிறத்தை மாற்றுவது கடினம் தான்.இருந்தாலும் முழுமையாக மாற்ற முடியா விட்டாலும் முகத்தில் ஒரு சில நல்ல மாற்றங்களை கொண்டு வர முடியும்.

நம்மில் பலரது முகம் கருமையாக பொலிவிழந்து காணப்படும்.இதற்கு காரணம் அதிக வெயில் முகத்தில் படுவது தான்.இதை சரி செய்வதற்காக பலர் ரசாயனம் கலந்த கண்ட பொருட்களை வாங்கி முகத்தில் அப்ளை செய்கிறோம்.இதனால் பின் விளைவுகள் மிகவும் மோசமனாக இருக்கும் என்பதை யாரும் உணர்வதில்லை.இந்நிலையில் இயற்கையான பொருட்களை வைத்து கருமையான முகத்தை சற்று வெண்மையாக அதே சமயம் பொலிவாக மாற்ற இந்த வழியை பாலோ செய்யுங்கள் போதும்.

தேவையான பொருட்கள்:-

*எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி

*தேன் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து இரண்டாக நறுக்கி கொள்ளவும்.அதில் பாதி எலுமிச்சம் பழத்தை எடுத்து 2 தேக்கரண்டி அளவு சாறு பிழிந்து ஒரு பவுலில் சேர்த்து கொள்ளவும்.எலுமிச்சம் பழ விதைகளை நீக்கி விடவும்.

அடுத்து துயத் தேன் 1 தேக்கரண்டி எடுத்து அதில் கலந்து கொள்ளவும்.

இந்த ரெமிடியை பயன்படுத்துவதற்கு முன்னர் முகத்தை சுத்தமான தண்ணீர் கொண்டு நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.பின்னர் தயார் செய்து வைத்துள்ள ரெமிடியை முகத்தில் போட்டு நன்கு மஜாஜ் செய்யவும்.குறைந்தது 5 நிமிடங்கள் மஜாஜ் செய்து 30 நிமிடங்கள் வரை முகத்தில் இந்த கலவை இருக்கும் படி பார்த்து கொள்ளவும்.பின்னர் சுத்தமான தண்ணீர் கொண்டு முகத்தை நன்கு கழுவவும்.

இந்த முறையை தொடர்ந்து கடைபிடித்து வந்தோம் என்றால் முகத்தில் தென்பட்ட கருமை நீங்கி முகம் வெண்மையாகவும்,பொலிவாகவும் மாறத் தொடங்கும்.

Exit mobile version