Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இதோ வந்துவிட்டது எச்சிலை துப்பி ஹேர் கட் செய்யும் முறை! வைரலாகும் ட்ரெண்டிங் வீடியோ!

Here's how to make a saliva spit hair cut! Trending Video Going Viral!

Here's how to make a saliva spit hair cut! Trending Video Going Viral!

இதோ வந்துவிட்டது எச்சிலை துப்பி ஹேர் கட் செய்யும் முறை! வைரலாகும் ட்ரெண்டிங் வீடியோ!

வளர்ந்து வரும் டெக்னாலஜி உலகத்தில் பல வகைகளில் சிகை அலங்காரம் வந்துவிட்டது. சிகை அலங்காரம் படிப்பதற்கான தனி வகுப்புகளும் வந்துவிட்டது. இந்த ஹேர் கட்டிங் செய்யும் முறையில் ஃபயர் கட்டிங் என்பது டிரெண்டாகி வந்தது. அதனையடுத்து தற்போது எச்சிலைத் துப்பி ஹேர்கட் செய்யும் முறை ட்ரெண்டாகி வருகிறது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் முசாபர் என்ற நகரம் உள்ளது. இந்த நகரத்தில் பல சிகை அலங்காரம் செய்யும் கடைகள் உள்ளன. ஜாவித் ஹபீப் என்பவர் முசாபர் நகரத்தில் சலூன் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இவர்தான் அந்த நகரிலேயே சிகை அலங்காரம் செய்வதில் வல்லவர். இவர் சிகை அலங்காரம் குறித்து மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தியும் வருகிறார். இந்த வகுப்பிற்கு மாடலாக பூஜா குப்தா என்ற பெண்ணை நியமித்தார். பிறகு மாணவர்களுக்கு வகுப்புகள் குறித்து விவரமாக கூறிவந்தார். அப்பொழுது மாணவர்களிடம் திடீரென்று ஹேர்கட் செய்யும்போது தண்ணீர் இல்லை என்றால் தண்ணீருக்கு பதில் எச்சிலை பயன்படுத்தலாம் என கூறி மாடலாக அமர வைத்த பெண்ணின் தலையில் எச்சிலைத் துப்பி வகுப்பை நடத்தினார்.

வகுப்பின் போது சில மாணவர்கள் அதனை வீடியோ எடுத்தனர். ஆசிரியர் இவ்வாறு செய்ததை மாணவர்கள் இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர். தற்பொழுது அந்த வீடியோவானது வைரலாக பரவி வருகிறது. கொரோனா பரவும் இந்த காலத்தில் எச்சிலை துப்பி ஹேர் கட் செய்வது மிகவும் தவறானது. இவ்வாறு கூறி சிகை அலங்கார வல்லுனர் செய்ததை பலரும் எதிர்த்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி அந்த சிகை அலங்கார நிபுணர் நான் காமெடிக்காக தான் அவ்வாறு செய்தேன் என்று கூறி மன்னிப்பும் கேட்டுள்ளார். இருப்பினும் அதனை ஏற்றுக் கொள்ளாத மக்கள் அவர் மீது புகார் அளித்துள்ளனர். அதனையடுத்து அந்த சிகை அலங்கார நிபுணர் ஜாவித் மீது தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சில மாணவர்கள் இனிமேல் நான் அவரது வகுப்பிற்கு சென்று இனி கற்க மாட்டேன் என்று கூறியுள்ளனர்.

Exit mobile version