Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வாட்ஸ்அப்பில் ஹாய் மெசேஜ்:! உங்களைத் தேடிவரும் வேலை! புதிய திட்டம்!

வாட்ஸ்அப்பில் ஹாய் மெசேஜ்:! உங்களைத் தேடிவரும் வேலை! புதிய திட்டம்!

வாட்ஸ் அப்பில் ஹாய் என்று மெசேஜ் அனுப்புவதன் மூலம் வேலை தேடும் இளைஞர்கள் தங்களது சொந்த மாநிலங்கள் மற்றும் சொந்த ஊரிலேயே திறமைக்கேற்ற வேலை கண்டறியக் கூடிய செயற்கை நுண்ணறிவு சார்ந்த சட்போட்(Chatbot)மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

TIFAC எனப்படும் தொழில்நுட்ப தகவல் முன்கணிப்பு மற்றும் மதிப்பீட்டு கவுன்சில், ஷ்ராமிக் சக்தி மன்ச் (Shramik Shakti Manch) என்ற போர்ட்டலை உருவாக்கியுள்ளது.இந்த போர்டல் இந்தியா முழுவதும் உள்ள MSME-களின் புவியியல் வரைபடத்தை கொண்டுள்ளது. இது தங்கள் பகுதிகளிலேயே வேலைகள் கிடைப்பது மற்றும் அவர்களுக்குத் தேவையான திறன்கள் பற்றிய தரவை அளிக்கிறது. இதுமட்டுமின்றி தொழிலாளர்களை அவர்களின் சொந்த இடங்களில் உள்ள வாட்ஸ்அப் வாயிலாக,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை இணைக்கும்.

இதன் மூலம் வேலைதேடும் இளைஞர்கள் 7208635370 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு ஹாய் என்ற குறுஞ்செய்திய அனுப்பியவுடன்,அந்த நபரின்  பணி அனுபவம் பற்றிய தகவல்களைத் தேடும் பின்தொடர்தல் கேள்விகளைக் கேட்கும். பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் பயனரை அருகிலுள்ள வேலை வழங்கும் நிறுவனத்துடன் இணைப்பை ஏற்படுத்தும்.

மேலும் ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள் 022-67380800 என்ற எண்ணிற்கு அழைக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் விரைவில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதால்,
வேலைக்காக இளைஞர்கள் நீண்டகாலம் காத்திருக்க வேண்டியதில்லை.மேலும் வேலை தேடி அளையவும் தேவையில்லை.இந்த வாய்ப்பின் மூலம்,உதாரணமாக விவசாய தொழிலாளர்கள் மின் தொழிலாளர்கள்,பிளம்பர்ஸ் போன்ற வேலைவாய்ப்புகள் எளிதில் கிடைக்குமென்று TIFAC கூறியுள்ளது.

மேலும் இந்த தொழில்நுட்ப வசதி தற்போது ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே செயல்படுவதாகவும்,மேலும் இந்த திட்டத்தை மற்ற மொழிகளிலும் விரிவுபடுத்துவதில்  செயலாற்றி வருவதாகவும் TIFAC தலைமை கூறியுள்ளது.

Exit mobile version