இதயத்தை பாதுகாக்கும் செம்பருத்தி!! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன!!?
இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் செம்பருத்தியை வேறு எந்த நோய்க்கு எல்லாம் பயன்படுத்தலாம் இதன் மற்ற நன்மைகள் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
சித்தர்களால் தங்கபஸ்பம் என்று அழைக்கப்படும் செம்பருத்தியானது மருத்துவத்திற்காக மருந்தாக பயன்படுத்தப்படுகின்றது.செம்பருத்தி மட்டுமில்லமால் அதன் இலைகள், தண்டு, வேர்கள் கூட மருத்துவ குணம் வாய்ந்தது ஆகும்.
இந்த செம்பருத்தியில் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் உள்ளது. முக்கியமாக நமது உடலுக்குத் தேவையான வைட்டமின் சி சத்து அதிகமாக இருக்கின்றது.இதை முடி உதிர்ந்து மட்டுமில்லாமல் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தலாம். இதன் மூலமாக கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.
செம்பருத்தியின் மூலம் கிடைக்கும் நன்மைகள்:
* செம்பருத்தியை நாம் இதய ஆரோக்கியத்திற்காக பயன்படுத்தலாம்.இதய நோய் உள்ளவர்கள் செம்பருத்தியை தினமும் காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால் இதயம் பலம் பெரும்.
* பெண்கள் செம்பருத்தியை எடுத்துக் காட்டும் பொழுது அவர்களுக்கு உள்ள மாதவிடாய் கோளாறுகள், கருப்பை கோளாறுகள், ஒழுங்கற்ற மாதவிடாய்,வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகள் குணமடைகின்றது.
* செம்பருத்தியானது பெண்களுக்கு ஏற்படுகின்ற கர்பப்பை தொடர்பான பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.
* செம்பருத்தியை பயன்படுத்தினால் இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படுகின்ற நோய்களை குணப்படுத்த உதவி செய்கின்றது.
* வாய்ப்புண் இருப்பவர்கள் ஒரு மாதம் அதாவது 30 நாட்கள் தொடர்ந்து செம்பருத்தி பூக்களின் இதழ்கள் பத்து எடுத்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமடையும்.
* அஜீரணக் கோளாறுகள் இருப்பவர்கள் அனைவரும் செம்பருத்தி பூ எடுத்துக் கொள்ளலாம்.
* உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் செம்பருத்தி பூவை எடுத்துக் கொள்ளலாம்.