உங்களுக்கு உயர் இரத்த அழுத்தப் பிரச்சனை இருந்தால் அலட்சியம் கொள்ளாமல் சீக்கிரம் அதனை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முயலுங்கள்.இந்த பாதிப்பு யாருக்கு வேண்டுமானாலும் வரக் கூடியதாக இருக்கின்றது.
உயர் இரத்த அழுத்தம் எதனால் உண்டாகிறது?
*இரத்த குழாய் அடைப்பு
*இரத்த வெளியேற்றம்
*உடல் எடை கூடல்
*சர்க்கரை நோய்
*இதயம் சம்மந்தபட்ட பாதிப்பு
*சீர் இல்லாத இரத்த ஓட்டம்
உயர் இரத்த அழுத்த பாதிப்பின் அறிகுறிகள்:
*அடிக்கடி மயக்கம் உண்டாதல்
*மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுதல்
*கண் பார்வை குறைபாடு
*இதய துடிப்பில் மாற்றம்
*நெஞ்சு வலி
*தீராத தலைவலி
*தலைசுற்றல் உணர்வு
உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் செம்பருத்தி பானம்:
தேவையான பொருட்கள்:-
1)செம்பருத்தி பூவின் இதழ் – 5 முதல் 6
2)தண்ணீர் – ஒரு கப்
3)தூயத் தேன் / நாட்டு சர்க்கரை – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
1.ஒரு செம்பருத்தி பூவின் இதழை முதலில் சேகரித்து கொள்ளுங்கள்.பிறகு இதை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
2.பிறகு இந்த செம்பருத்தி இதழை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.
3.சிறிது நேரம் கழித்து நறுக்கி வைத்துள்ள செம்பருத்தி இதழ்களை போட்டு குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
4.தண்ணீர் நிறம் சிவப்பாக மாறும் வரை கொதிக்க வைத்த பிறகு அடுப்பை அணைத்துவிடுங்கள்.
5.பிறகு இந்த செம்பருத்தி பானத்தை கிளாஸ் ஒன்றிற்கு வடிகட்டி கொள்ளுங்கள்.அதன் பின்னர் இனிப்பு சுவைக்காக நாட்டு சர்க்கரை அல்லது ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.
6.இந்த செம்பருத்தி பானத்தை தினம் ஒரு கிளாஸ் பருகி வந்தால் உயர் இரத்த அழுத்தம் குறைந்துவிடும்.
7.உங்கள் பிபி நார்மல் நிலைக்கு வர இந்த பானத்தை தொடர்ந்து ஒன்று முதல் ஒன்றரை மாதங்கள் வரை அவசியம் பருக வேண்டும்.
8.அதேபோல் தினமும் ஒரு கப் முருங்கை கீரை பானம் அல்லது சூப் செய்து பருகி வந்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.