இந்தியாவில் சர்க்கரை நோய்க்கு அடுத்து அனைவரும் எதிர்கொள்ளும் நோயாக உயர் இரத்த அழுத்தம் உள்ளது.இந்த உயர் இரத்த அழுத்தத்தை ஹைப்பர் டென்சன் என்றும் அழைக்கிறாரகள்.உயர் இரத்த அழுத்தம் எப்பொழுதும் கட்டுக்குள் இருக்க வேண்டியது அவசியம்.இதற்காக தினமும் மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆனால் மாத்திரை இன்றி வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே உயர் இரத்த அழுத்த பாதிப்பிற்கு தீர்வு காண முடியும்.
உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் வைத்தியங்கள்:
1)பூண்டு பல் – இரண்டு
2)பால் – ஒரு டம்ளர்
தரமான பூண்டு பற்கள் இரண்டு எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளவும்.பிறகு இதை உரலில் போட்டு தட்டி எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு டம்ளர் பசும் பால் ஊற்றவும்.பால் ஒரு கொதி வந்ததும் இடித்த பூண்டு பற்களை போட்டு கொதிக்க வைத்து பருகினால் உயர் இரத்த அழுத்தம் குறையும்.
1)துளசி – 5 இலைகள்
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு டம்ளர்
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி சூடாக்கி கொள்ளவும்.பிறகு அதில் ஐந்து துளசி இலைகளை போட்டு கொதிக்க விடவும்.
சிறிது நேரம் கழித்து துளசி நீரை ஒரு டம்ளருக்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருகினால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.
1)ஓமம்
2)தண்ணீர்
வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் ஓமம் உயர் இரத்த அழுத்தத்திற்கு மருந்தாக திகழ்கிறது.
ஓமத்தை ஒரு கிளாஸ் அளவு நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.
1)இலவங்கப்பட்டை
2)தண்ணீர்
பாத்திரம் ஒன்றில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும்.பிறகு ஒரு பட்டையை இடித்து சூடாகி கொண்டிருக்கும் நீரில் போட்டு கொதிக்க வைத்து பருகினால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.அதேபோல் ஆளிவிதை ஊறவைத்த நீரை பருகினாலும் உயர் இரத்த அழுத்தம் குறையும்.