HIGH BLOOD PRESSURE: இந்த 6 விஷயங்களை பாலோ செய்தால் பிபி கண்டிப்பா கம்மியாகும்!!

0
119
HIGH BLOOD PRESSURE: If you follow these 6 things BP will definitely come down!!

HIGH BLOOD PRESSURE: இந்த 6 விஷயங்களை பாலோ செய்தால் பிபி கண்டிப்பா கம்மியாகும்!!

ஹைப்பர்டென்ஷன் என்றழைக்கப்படும் உயர் இரத்த அழுத்தம் இதய சம்மந்தமான கோளாறுகளை ஏற்படுத்தக் கூடியவையாகும்.கட்டுப்படுத்த முடியாத கோபம்,டென்ஷன்,மன அழுத்தம் ஆகியவை உயர் இரத்த அழுத்த பாதிப்பின் முக்கிய அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது.

உயர் இரத்த அழுத்த பாதிப்பு இருப்பவர்களுக்கு அடிக்கடி தலைவலி,மயக்கம்,எரிச்சல்,தூக்கமின்மை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை மற்றும் உணவுமுறை பழக்கமே இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

உயர் இரத்த அழுத்தத்தை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகள் மூலம் கட்டுப்படுத்திக் கொள்ள முயலுங்கள்.

1)தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.நடைபயிற்சி,தியானம் செய்வதினால் கோபம்,டென்ஷன்,மன அழுத்தம் உள்ளிட்டவை நீங்கும்.

2)உணவில் உப்பை குறைத்துக் கொள்வதால் உயர இரத்த அழுத்த பாதிப்பை கட்டுக்குள் வைக்க முடியும்.

3)ஆரோக்ய உணவுமுறை பழக்கத்தை பின்பற்ற வேண்டும்.எலுமிச்சை பானம்,வெந்தய பானம்,இலவங்கப்பட்டை பானம் தயாரித்து குடித்து வரலாம்.

4)உணவில் பூண்டு சேர்த்துக் கொள்வதை வழக்கமாக்கி கொண்டால் உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

5)உயர் இரத்த அழுத்த பாதிப்பு இருப்பவர்கள் புகை,மது பழக்கத்தை முற்றிலும் கைவிட வேண்டும்.

6)ஏலக்காய்,உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகளை சாப்பிட்டு வரலாம்.தினமும் 8 மணி நேர உறங்க வேண்டும்.உடல் எடையை ஆரோக்கியமான வழிகளில் குறைக்க வேண்டும்.