அதிமுக தலைமைக்கு கெடு விதித்த உயர்நீதிமன்றம்!

0
171

அதிமுகவை முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் தொடங்கிய காலத்திலிருந்து அடிப்படை உறுப்பினராக செயல்பட்டு இருக்கின்றேன் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் இறப்புக்கு பிறகு கட்சி விதிகளில் திருத்தம் செய்தார்கள்.

பொதுச் செயலாளர் பதவியை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பதவிகளை ஏற்படுத்தினார்கள் ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளராகவும்,இ.பி.எஸ் இணை ஒருங்கிணைப்பாளராகவும், கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டார்கள்.

அதோடு மட்டுமல்லாமல் எந்தக் காரணத்தையும் தெரிவிக்காமல் என்னை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து கடந்த 2018 ஆம் ஆண்டு நீக்கியிருக்கிறார்கள் அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது,

இந்த சூழ்நிலையில், வருகின்ற ஏழாம் தேதி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு தேர்தல் நடைபெற இருப்பதாக கடந்த 2-ஆம் தேதி அறிவித்து இருக்கிறார்கள்..இந்த தேர்தலை நடத்தும் ஆணையர்களாக பொன்னையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

கட்சி அடிப்படை உறுப்பினர்களுக்கு தெரியும் விதத்தில் 21 நாட்களுக்கு முன்னர் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் என்பது கட்சியின் விதி அடிப்படை உறுப்பினர்கள் சேர்க்கையிலும் ஏராளமான முறைகேடுகள் நடந்திருக்கின்றன, ஆயிரக்கணக்கான உறுப்பினர்களுக்கு இதுவரையில் உறுப்பினர் அட்டை வழங்கப்படவில்லை வாக்காளர் பட்டியலும் வெளியிடப்படவில்லை.

ஆகவே தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் 21 நாட்களுக்கு முன்னர் தேர்தல் அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும் தேர்தலை நடத்த உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை நியமனம் செய்ய வேண்டும். என்று அதிமுக நிர்வாகிகள் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டு இருக்கிறது.

இந்த மனு அவசர வழக்காக நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு நேற்று பிற்பகலில் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது அப்போது நீதிபதி தெரிவித்ததாவது, 2018 ஆம் வருடம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட மனுதாரர் எப்படி இந்த வழக்கை தொடர இயலும் என்று தெரிவித்து கேள்வி எழுப்பினார்.

நீதிபதியின் இந்த கேள்விக்கு மனுதாரரின் வழக்கறிஞர் தியாகேஸ்வரன் மனுதாரரை காட்சியிலிருந்து நீக்கிய பிறகுதான் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டனர். கட்சி விதிகளை மீறி தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மனுதாரரை போல 27 ஆயிரத்திற்கும் அதிகமான அதிமுக உறுப்பினர்கள் இந்த வழக்கில் இணைய தயாராக இருக்கிறார்கள் என்று வாதம் செய்தார்.

அப்போது விருப்பமனு வழங்கப்படாமல் வெளியேற்றப்பட்ட அதிமுக உறுப்பினர் பிரசாத் சிங் ஆஜராகி விதிகளை பின்பற்றாமல் 5 நாட்களில் தேர்தல் நடைமுறையை படிக்க முயற்சி நடந்து கொண்டிருப்பதாகவும், விருப்பமனு வாங்க தலைமை அலுவலகம் சென்றபோது தன்னை வெளியில் துரத்திய தாகவும், தெரிவித்தார்.

ஓமப்பொடி பிரகாஷ் என்பவர் ஆஜராகி கட்சி தலைமை அலுவலகத்திற்கு சென்ற என்னை அங்கிருப்பவர்கள் தாக்கினார்கள் என்று தெரிவித்தார், அதற்கு நீதிபதி வழக்கு தொடர்ந்தவர் மட்டுமே பேச முடியும் மற்றவர்கள் பேச இயலாது என்று கண்டிப்புடன் தெரிவித்தார்.

அதிமுகவின் சார்பாக மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணம் சார்பாக மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் எடப்பாடி பழனிச்சாமி சார்பாக மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் உட்பட பலர் ஆஜராகி வாதிட்டார்கள்.

அரவிந்த் பாண்டியன் வாதிட்ட போது மூன்று ஆண்டு காலமாக கட்சியுடன் எந்தவிதமான தொடர்பும் இல்லாதவர் எவ்வாறு இப்படி ஒரு வழக்கை தொடர முடியும்? கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சிவில் வழக்காக தொடர்ந்து அதில் வெற்றி பெற்ற பிறகுதான் இதுபோன்ற வழக்கை தொடரலாம் என்று கூறினார்.

அதற்கு எதிர்த் தரப்பு வழக்கறிஞர் 5 நாட்களில் தேர்வு நடத்துபவர்கள் இரண்டு நாட்களில் பதில் மனு தாக்கல் செய்து விடுவார்கள் வழக்கை வருகிற திங்கள் கிழமைக்கு தள்ளி வைக்கவேண்டும், பதிலளிக்க நீண்ட கால அவகாசம் வழங்கினால் போட்டியிட யாரும் செய்யவில்லை இதனால் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் வெற்றி பெற்று விட்டார்கள் என்று அறிவித்து விடுவார்கள் என்று வாதிட்டார்.

இதனை தொடர்ந்து வழக்கில் தொடர்புடைய அனைத்து தரப்பையும் கேட்காமல் இடைக்கால தடை விதிக்க இயலாது மனுதாரர் விருப்பப்பட்டால் மனுவை தள்ளுபடி செய்கிறேன், அவர் டிவிஷன் பென்சில் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

அதன்பிறகு இந்த வழக்கு தொடர்பாக பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அதோடு தேர்தல் ஆணையர்கள் பொன்னையன் பொள்ளாச்சி ஜெயராமன் மூன்று வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் விசாரணையை ஜனவரி மாதம் 7ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கிறேன் என்று நீதிபதி உத்தரவிட்டு இருக்கிறார்.