Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கோட் கவுன் அணிய விலக்கு !!

உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கோட் கவுன் அணிய விலக்கு !!

சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரடி விசாரணையில் கலந்துகொள்ளும் வழக்கறிஞர்கள் இனி கரும்பு கோட் , கருப்பு கவுன் அணிய விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 7- ஆம் தேதி, திங்கட்கிழமை முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரடி விசாரணையில் கலந்துகொள்ளும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் வெள்ளை சட்டையுடன் கழுத்துப்பட்டை மட்டுமே அணிந்து ஆஜராக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக கோட், கவுன் அணிய விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றம் கொரோனா காரணமாக காணொளி வாயிலாக விசாரணை நடந்து வந்த நிலையில் ,சமீபத்தில் தலைமை நீதிபதிகள் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட நீதிமன்றம் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.

அதில் கொரோனா பரவல் காரணமாக நேரடி விசாரணை நடத்த இயலாத நிலையில் இருந்து சென்னை உயர் நீதிமன்றம், செப்டம்பர் 7- ஆம் தேதி முதல் நேரடி விசாரணை தொடங்க முடிவு செய்தனர். இதனால் 160 நாட்களுக்கு பிறகு நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரிக்க இருப்பதனை சோதனை முறை விசாரணையாக இரண்டு வாரங்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அதில் முதற்கட்டமாக இரு நீதிபதிகள் கொண்ட ஆறு அமர்வு மட்டுமே நேரடி விசாரணையில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது .

 

 

 

Exit mobile version