Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சூர்யா ரசிகர்களுக்கு  ஷாக்  நியூஸ்!! ஹைகோர்ட் விடுத்த அதிரடி உத்தரவு!!

High Court lifts ban on Ganguwa film.

High Court lifts ban on Ganguwa film.

CINEMA:கங்குவா படத்திற்கான தடையை நீக்கியது உயர்நீதிமன்றம்.

நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் சிவா இணைந்துள்ள படம் தான் கங்குவா இந்த படத்தை ஞானவேல் ராஜாவின்  ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து உள்ளது. இந்த படம் நவம்பர் 14ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இது ரசிகர்களிடையே பெரும் எதிர் பரப்பை பெற்று இருக்கிறது . 2024 ல் திரைக்கு வரவிருக்கும் பெரிய படமாக பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் தான் படம் வெளியிடக்கூடாது ஏன் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து  இருக்கிறது.  அதாவது திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, தனது ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில், டெடி- 2, எக்ஸ் மீட்ஸ் ஓய், தங்கலான் பட தயாரிப்பு பணி, ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து 99 கோடியே 22 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி இருந்தார்.

கடனை திரும்பி வழங்க ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்தின் மீது உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது ரிலையன்ஸ் நறுவனம்.இந்த நிலையில் கங்குவா படம் திரைக்கு வர இது  பிரச்சனையாக  வந்தது. இது சூர்யா ரசிகர்களிடத்தில் பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. கங்குவா திரைப்படம் உலக அளவில் 1000  திரைகளில் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தான் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய தொகை முழுமையாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் செலுத்தியதை அடுத்து கங்குவா படத்தை வெளியிட தடையில்லை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதனால் கங்குவா திரைப்படம் திட்டமிட்டபடி திரையிடப்படும்  இச் செய்தி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Exit mobile version