சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது திமுக இந்தத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் வெற்றி பெற்றார், அதேபோல சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டசபை தொகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றார்.தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டசபை தொகுதியில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ் மூன்றாவது முறையாக வெற்றியை பதிவு செய்தார்.
இந்த நிலையில், வாரிசு அரசியலை திமுக ஊக்குவிக்கிறது என்ற ஒரு கருத்து தமிழகம் முழுவதும் ஆரம்பத்திலிருந்தே பரவலாக இருந்து வந்தது. அப்படி இருக்க அரசியலில் எந்த விதமான அனுபவமும் இல்லாமல் முதல் முறையாக தன்னுடைய மகனான உதயநிதி ஸ்டாலின் அவர்களை முதலமைச்சர் ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபைத் தொகுதியில் நிற்கவைத்து போட்டியிட வைத்தார். அந்த தொகுதியில் அவர் சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியும் அடைந்தார்.
இந்த நிலையில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதி திமுக சட்டசபை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினின் வெற்றியை தடுத்து போடப்பட்ட வழக்கு தேர்தல் ஆணையம் உதவி ஸ்டாலின் பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த தேர்தலில் முதல் முறையாக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதியில் திமுக வின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றார்.இந்த சூழ்நிலையில், அவர் தேர்தலில் பெற்ற வெற்றி செல்லாது என தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில் உதயநிதி ஸ்டாலின் குற்ற வழக்கு விவரங்களை மறைத்து தவறான தகவலை தெரிவித்து இருக்கிறார். ஆகவே அவருடைய தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.இந்த வழக்கு விசாரணை நீதிபதி பாரதிதாசன் முன்பாக நேற்றைய தினம் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்த மனு தொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் இரண்டு வார காலத்தில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் மாதம் 1ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.