ரம்ஜான் தொழுகை – நீதிமன்றம் அளித்த தீர்ப்பு

0
143

கொரோனா நோய் பரவல் காரணமாக ஊரடங்கு அமலிலுள்ள நிலையில் வழிபாட்டு தலங்கள், திரையரங்குகள், பூங்காக்கள் உட்பட பொது மக்கள் கூடும் அனைத்து இடங்களும் மக்கள் நுழைய தடை செய்யப்பட்டுள்ளன்.

தற்போது அமலில் இருக்கும் நான்காம் கட்ட ஊரடங்கில், வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி தரப்படலாம் என எதிர்பார்த்திருந்த நிலையில் அரசு இன்னும் அதில் முடிவெடுக்கவில்லை என கூறப்படுகிறது.

வரும் மே 25ம் தேதி இஸ்லாமியர்களின் பண்டிகையான ‘ரம்ஜான்’ கொண்டாடப்படவிருக்கிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக ரம்ஜான் பண்டிகையின்போது மக்கள் தங்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்துமாறு தலைமை ஹாஜி அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் சாகுல் ஹமீது என்பவர் ரம்ஜான் அன்று மதுரையில் உள்ள மசூதிகளில் 2 மணி நேரம் மட்டுமாவது சிறப்பு தொழுகைக்கு அனுமதி அளிக்குமாறு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு அளித்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் வழிபாட்டுத் தலங்களை திறப்பதன் மீதான முடிவுகள் மத்திய மற்றும் மாநில அரசினை சார்ந்தவை என்றும், இதனால் நீதிமன்றம் அரசு கொள்கையில் தலையிட முடியாது என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்துள்ளது.