Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மீண்டும் உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை! கடும் அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!!

#image_title

மீண்டும் உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை! கடும் அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!!

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை தற்பொழுது உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையேற்றம் மற்றும் விலை இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தற்பொழுது இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றது.

பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையை தினசரி எண்ணெய் நிறுவனங்கள் விலையேற்றம் விலை இறக்கம் செய்து மாற்றி வருகின்றது. இந்நிலையில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர் விலையை மாதத்திற்கு ஒரு முறை மாற்றி வருகின்றது.

அதன்படி ஒவ்வொரு மாதமும் முதல் நாள் அதாவது 1ம் தேதி கேஸ் சிலிண்டர் விலையை ஏற்றி அல்லது இறக்கி எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிடும். அந்த வகையில் இந்த மாதம் அதாவது நவம்பர் மாதம் 1ம் தேதியான இன்று கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறவிப்பு வெளியிட்டுள்ளது.

வணிகம் சார்பாக பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டருக்கான விலையை எண்ணெய் நிறுவனங்கள் தற்பொழுது உயர்த்தி இருக்கின்றது. அதன்படி 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டரின் விலை 101.50 ரூபாய் உயர்ந்து சென்னையில் 1999.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வணிகப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டரின் விலை தொடர்ந்து இரண்டு மாதங்களாக அதிகரித்து வருகின்றது. கடந்த அக்டோபர் மாதம் 203 ரூபாய் உயர்ந்தது. ஆனால் வீட்டு உபயோகத்திற்காக பயன்படும் கேஸ் சிலிண்டரின் விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் 918.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

Exit mobile version