தை அமாவாசை வழிபாட்டின் சிறப்பம்சங்கள்…!
மாதத்திற்கு ஒருமுறை அமாவாசை வருவது வழக்கம்… ஆனால் தை மாதத்தில் வரும் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று.
இந்த அமாவாசையில் தவறாமல் கோயிலுக்கு சென்று வழிபாடு மேற்கொள்ள வேண்டும். இந்த அமாவாசை நாள் அன்று விரதம் இருந்தால் பல நன்மைகள் கிடைக்கும். நாம் செய்த பாவங்கள் மட்டும் இன்றி நம் முன்னோர்கள் செய்த பாவங்களும் முழுமையாக நீங்கிவிடும்.
பித்ரு தோஷம்.. இருப்பவர்கள் இந்த நாளில் விரதம் இருந்து வழிபாடு மேற்கொண்டால் செய்த பித்ரு தோஷம் மட்டும் இன்றி செய்த பாவங்ககள் அனைத்தும் முழுமையாக நீங்கி விடும்.
சனி தோஷம் நீங்க இந்த தை அம்மாவாசையில் விரதம் இருக்க வேண்டும்… இந்த நாளில் நம் முன்னோர்களுக்கு படையல் இடுவது வழக்கம்.
மலை மீது அமைந்திருக்கும் சிவன் கோயிலுக்கு சென்று வழிபாடு மேற்கொண்டால் சகல நன்மைகளும் கிடைக்கும்.
இந்த தை அமாவாசையில் தானம் செய்வது, புனித நீராடுவது மேற்கொண்டால் புண்ணியம் கிடைக்கும்.