மீண்டும் விசாரணைக்கு வரும் ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கு! கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பரபரப்பு!

0
248

ஹிஜாப் விவகாரம் குறித்து முஸ்லிம் மாணவர்கள் சார்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிலுவையில் இருந்தனர். இந்த மனுக்களில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வர தங்களை அனுமதிக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டுமென்று தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த மனுக்கள் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய அந்த அமர்வு கடந்த 10ஆம் தேதி இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. அனைத்து மாணவர்களும் மத அடையாள ஆடைகளை அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டது கர்நாடக மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளை உடனே திறக்க வேண்டும் என்றும், இறுதித் தீர்ப்பு வரும்வரை அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றும், நீதிபதிகள் வேண்டுகோள் விடுத்தார்கள்.

அதோடு இந்த மனுக்கள் மீது தொடர்ந்து விசாரணை நடத்தி மிக விரைவாக தீர்ப்பு வழங்குவதாக தலைமை நீதிபதி உறுதியளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் ஹிஜாப் விவகாரம் குறித்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளனர்.

அந்த மனுக்கள் மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது. பகல் 2 மணியளவில் இந்த மனுக்கள் மீதான விசாரணை நடைபெறவிருக்கிறது. இந்த சூழ்நிலையில், இன்றையதினம் அட்வகேட் ஜெனரல் பிரபுலிங்க நாவதகி அரசு தரப்பு வாதத்தை எடுத்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.