Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் கடத்தல்! பயணி அதிரடி கைது! 

டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் கடத்தல்! பயணி அதிரடி கைது!

டெல்லியில் தரையிறங்கிய விமானம் கடத்தப்பட்டதாக வந்த தகவலை அடுத்து பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் துபாய் ஏர்போர்ட்டில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை நோக்கி விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. நடுவில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக அந்த விமானம் டெல்லி விமான நிலையத்தில் அன்று இரவு 9:45க்கு தரை இறங்கியது.

இந்நிலையில் அந்த விமானத்தில் பயணம் செய்த ராஜஸ்தான் மாநிலம் நாகவுரை சேர்ந்த பயணி மோதி சிங் என்பவர் விமானம் கடத்தப்பட்டதாக தனது வலைதள பக்கத்தில் டுவிட் செய்தார். இதையடுத்து அவரது இந்த பதிவு சமூக வலைதள பக்கத்தில் செம வைரலானது. அந்த விமானமும் சில மணி நேரம் தாமதமாக ஜெய்ப்பூரை சென்றடைந்தது.

இதையடுத்து மோதி சிங்கின் இந்த பதிவு போலீசாருக்கும் சென்றடைந்தது. குடியரசு தின விழா நடைபெற இருக்கும் சமயத்தில் இந்த பதிவு அவர்களை திகைப்படைய செய்தது. இதையடுத்து டெல்லி சைபர் கிரைம் போலீசார் விமானம் கடத்தப்பட்டது என பரவ செய்த நபர் யார்? என விசாரணை செய்தனர்.

விசாரணை முடிவில் குறும்புக்கார நபர் மோதி சிங்கை ஜெய்ப்பூரில் நேற்று கைது செய்தனர். குடியரசு தின விழாவையொட்டி விமானம் கடத்தப்பட்டதாக பரவிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.

Exit mobile version