Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாகிஸ்தானில் ஹிந்து தொழிலதிபர் சுட்டுக்கொலை! குறிவைத்து தாக்கப்படும் ஹிந்துக்கள்!

பாகிஸ்தானின் சிந்து மாகானத்தில் ஹிந்து தொழிலதிபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதால், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

முஸ்லீம் நாடான பாகிஸ்தானில், ஹந்துக்கள் மிகக் குறைவானவர்களே உள்ளனர். அங்கு, சிறுபான்மையினராக வாழ்வதால், அவர்களுக்கு பாதுகாப்பு என்பது சில நேரங்களில் கேள்விக்குறியாகவே உள்ளது.

இந்நிலையில், சிந்து மாகானம் கோட்கி மாவட்டத்தில் உள்ள டார்கி நகரில், திங்கட்கிழமை இரவு சதன் லால் என்ற ஹிந்து தொழிலதிபரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொண்றுள்ளனர். அவருக்கு, கொலை மிரட்டல்கள் எராளமாக இருப்பதாக பலமுறை புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததே இதற்கு காரணம் என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதே போன்று, வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பெசவார் நகரிலும் ஒரு இந்து மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அடுத்தடுத்து சிறுபான்மை ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால், பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.  கடந்த மாதம் 4ஆம் தேதி இதே சிந்து மாகானத்தில் சுனில் குமார் என்ற ஹிந்து தொழிலதிபர் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version