இந்துக்கள் அசைவம் உண்பதையே மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்று பாஜக கட்சி ஹெச்.ராஜா கோரிக்கை விடுத்து இருந்ததாக தகவல் பரவி வருகிறது. இந்துக்கள் அசைவ உணவு உண்பதால் தான் திருப்பரங்குன்ற மலை மேல் உள்ள தர்காவில் ஆடு, கோழி பலியிடுவதை சர்வ சாதாரணமாக எண்ணி மக்கள் இருக்கின்றனர். எனவே இந்துக்களுக்கு அசைவம் சாப்பிடுவதை தடை விதிக்க வேண்டும் என்று அக்கோரிக்கையில் இடம்பெற்றதாக தகவல் பரவி வருகின்றது. இதன் நம்பகத்தன்மை ஆராய்ந்ததில் இது முற்றிலும் பொய்யான செய்தி என்று சமீபத்தில் வெளியாகியுள்ளது.
இது புதிய தலைமுறை நியூஸ் சேனல் வெளியிட்டுள்ளது என்று பரவி இருந்தது. இந்த நியூஸ் ஆனது ஏற்கனவே அவர் சிறையில் இருந்து வெளியேறும் போது எடுக்கப்பட்ட ஒன்று என்று புதிய தலைமுறை அபிஷியல் சேனலில் கண்டறியப்பட்டிருந்தது. இதனை மேலும் உறுதி செய்ய புது தலைமுறை நியூஸ் சேனலை காண்டாக்ட் செய்து கேட்ட போதும் இது பொய்யான தகவல் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.