தவெக தலைவர் விஜய் நீட் தேர்வு ரத்து குறித்து திமுக அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என அவர் எக்ஸ் வலைத்தளத்தில் தகவலை வெளியிட்டிருந்தார். அவர் அப்பதிவில், “எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் நம் நாட்டிலே சொந்த நாட்டிலே” என்ற பாடல் நம்மை ஏமாற்றும் ஆட்சியாளர்களுக்கு பொருந்தும் என பதிவிட்டிருந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் நீட் தேர்வை கண்டிப்பாக நாங்கள் ரத்து செய்வோம். அதன் ரகசியம் எங்களுக்கு மட்டுமே தெரியும் எனக்கூறி திமுக அரசு வாக்கு சேமித்திருந்தது. தற்சமயம், நீட் தேர்வு ரத்து எங்களால் முடியாது அது ஒன்றிய அரசின் கையில் தான் உள்ளது என்று கூறுவது நியாயமா? இது போல் போலி வாக்குறுதியை மக்கள் நம்பிக்கொண்டே இருக்க மாட்டார்கள்.. வரும் 2026 தேர்தலில் இதன் எதிரொலி உங்களுக்கு புரிய வரும் என திமுக அரசை கண்டித்து அவர் பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவு தற்போது பெரும் பேசும் பொருளாக மாறியுள்ளது. அதன் பின் இன்று செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாது! அது மத்திய அரசின் பிடியில் தான் உள்ளது. திமுக சொன்னபடி, ரத்து தொடர்பான மசோதா அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தும், மத்திய அரசு அதை ஏற்கவில்லை. இதைத் தவெக தலைவர் அறிந்துள்ளாரா? என தெரியவில்லை! கேள்வி கேட்க வேண்டும் என்றால் மத்திய அரசை தான் கேட்க வேண்டும்! இந்நிலையில் மக்கள், விசிக திமுக கூட்டணியில் இருந்து தவெகவின் கூட்டணியில் இணையும் என்று சில நாட்களுக்கு முன் விசிக செயல்பாட்டினால் தெரிய வந்திருந்தது. தற்போது இவர் தவெகவை எதிர்த்து முதல் ஆளாக பதில் அளித்துள்ளது “இவர் யார் பக்கம்” என்ற சந்தேகங்களை கிளப்பி வருகின்றது..