தலைமுறை தலைமுறையாக கொண்டாடப்பட்டு வரும் பொங்கல் திருநாளின் உடைய வரலாறு என்பது இன்றளவும் பலருக்கு தெரியாத விஷயமாகவே உள்ளது. இந்த பதிவில் பொங்கல் திருநாளின் உடைய சிறப்புகள் மற்றும் வரலாறு குறித்து காண்போம்.
முற்காலங்களில் நல்ல மழை பெய்ய வேண்டியும் நாடு செழிக்க வேண்டியும் மார்கழி மாதத்தில் பெண்கள் விரதத்தை கடைபிடித்தனர். மார்கழி மாதம் முழுவதும் விரதம் இருந்து தை மாதத்தின் முதல் நாளில் விரதத்தை முடிப்பர்.
மேலும், உழவர்கள் மழையின் உடைய உதவியினால் ஆடி மாதம் முதல் உழைத்து சேர்த்த நெல்லை மார்கழி மாதத்தில் அறுவடை செய்து வீட்டிற்கு கொண்டு வருவர். அவ்வாறு ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உழைத்த உழவர்கள் தங்களுடைய உழைப்பிற்கு உதவி செய்த இயற்கைக்கும் புலவர்களோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் நன்றியை தெரிவிக்கும் விதமாக தை மாதத்தின் முதல் நாளை உழவர் திருநாளாக கொண்டாடுவது வழக்கம்.
அதிலும் குறிப்பாக, தாங்கள் அறுவடை செய்த நெல்லை புது பானையில் பொங்கல் வைத்து சூரியனுக்கு படையலிட்டு தை மாதத்தின் முதல் நாளில் வழிபடுவர். முதல் நாள் சூரிய பொங்கலைத் தொடர்ந்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு இனிப்பு சுவைமிக்க பொங்கலை பகிர்ந்து வாழ்த்துகளையும் பரிமாறி மகிழ்வர்.
குறிப்பு :-
“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்ற நற்றிணை பாடல் வரிகளிலும், ” தைஇத் திங்கள் தண்ணிய தரினும் ” என்ற குறுந்தொகை பாடல் வரிகளிலும், ” தைஇத் திங்கள் தண்கயம் போல ” என்ற புறநானூறு பாடல்களிலும் என தொடர்ந்து ஐங்குறுநூறு பாடல் தை மாத நீராடல் பற்றிய குறிப்புகள் என சங்க இலக்கியங்களில் ஏராளமான பாடல்கள் தைப்பொங்கல் குறித்த சிறப்புகளையும் கொண்டாடப்படும் விதங்களையும் நம்மால் அறிந்து கொள்ள முடியும்.