Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மனித உரிமைகள் பயிற்சி வளாகமாக மாறும் ஹிட்லரிர் வீடு!! வெளியான முக்கிய அறிவிப்பு!!

hitlers-house-to-become-human-rights-training-center-important-announcement

hitlers-house-to-become-human-rights-training-center-important-announcement

மனித உரிமைகள் பயிற்சி வளாகமாக மாறும் ஹிட்லரிர் வீடு!! வெளியான முக்கிய அறிவிப்பு!!
அடால்ப் ஹிட்லர் அவர்கள் வசித்து வந்த வீடு மனித உரிமைகள் பயிற்சி வளாகமாக மாற்றப்பட்வுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பை கடந்த வாரம் ஆஸ்திரியாவின் உள்கட்டமைப்பு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அடால்ப் ஹிட்லர் வாழ்ந்த வீடு நாஜிக்கள் யாத்திரை மேற்கொள்ளும் அளவிற்கு புனித தளமாக மாறி வருகின்றது. இதை தடுப்பதற்காக என்ன செய்ய வேண்டும் என்ற ஆலோசனை நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் ஹிட்லரின் வீடு மனித உரிமைகள் பயிற்சி வளாகமாக மாற்றப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வியென்னாவில் இருந்து 284 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைந்திருக்கும் வடமேற்கு ஆஸ்திரியாவின் பிரௌனாவ் அம் இன் பகுதியில் உள்ள கட்டிடத்தில் ஹிட்லர் பிறந்தார். ஹிட்லர் பிறந்து மூன்றரை வயது வரை அந்த கட்டிடத்தில் தான் வளர்ந்து வாழ்ந்து  வந்தார். ஹிட்லர் வளர்ந்து வாழ்ந்து வந்த கட்டிடத்தின் உரிமையாளர் கெர்லிண்ட் பொம்மர் ஆவார். ஹிட்லர் பிறக்கும் முன்பு வரை கெர்லிண்ட் பொம்மர் அவர்கள் தான் இந்த கட்டிடத்தை வைத்திருந்தார்.
கடந்த 2016ம் ஆண்டு ஹிட்லர் அவர்களின் வீட்டை அரசாங்கம் கைப்பற்றியது. இதையடுத்து 2019ம் ஆண்டு ஹிட்லரின் வீடு காழல் நிலையமாக மாற்றப்படும் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால் அறிவித்த படி ஹிட்லரின் வீடு காவல் நிலையமாக மாற்றப்படவில்லை.
இதையடுத்து 2019ல் இருந்து நாஜிக்கள் யாத்திரை மேற்கொள்ளும் புனித தளமாக மாறி வந்தது. இதை தடுக்க ஹிட்லர் வாழ்ந்த வீடு ஆஸ்திரியாவின் மிகப்பெரும் மனித உரிமைகள் அலுவலகம் மற்றும் பயிற்சி வளாகமாக மாற்றப்படவுள்ளது.
Exit mobile version