ம்ம் சீக்கரம் ஆகட்டும் கெலம்புங்கள்!!அதிமுக இறுதி தீர்ப்புக்கு ?..

0
230
  • ம்ம் சீக்கரம் ஆகட்டும் கெலம்புங்கள்!!அதிமுக இறுதி தீர்ப்புக்கு ?..

சென்ற மாதம் அ.தி.மு.க. ஒன்றை தலைமை பொதுக்குழு விவகாரத்தில் தலையிட சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.இதைதொடர்ந்து பன்னீர்செல்வம் தரப்பினர் தொடுத்த வழக்கில் தடை விதிக்கப்படாததுடன், பச்சைக் கொடியும் காட்டப்பட்டது. பல பிரச்சனைகளை கடந்து இன்று இன்று காலை இறுதி தீர்ப்பு வரும் என அதிமுக தொண்டர்களிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் காலை 9.15 மணிக்கு நடைபெற உள்ளது. சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு 9 மணிக்கு அறிவிக்கப்படும் நிலையில் அந்த தீர்ப்பை பொறுத்தே அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா? நடைபெறாதா? என்பது தெரியும். இந்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க தனது இல்லத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி புறப்பட்டார். சென்னை பசுமைவழி சாலையில் உள்ள தனது வீட்டிலிருந்து காலை 6.45 மணியளவில் பொதுக்குழுவில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி புறப்பட்டார். கடந்த பொதுக்குழு கூட்டத்திற்கு காரில் சென்ற எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பரப்புரை வாகனத்தில் பொதுக்குழு கூட்டத்திற்கு சென்றுகொண்டிருக்கிறார்.

வீட்டில் இருந்து புறப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு வழிநெடுகிலும் அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். மேலும் வருங்கால முதல்வர் என அவரின் பெயரை சொல்லி முழக்கமிட்டனர்.அவர் பயணிக்கும் வாகனம் மீது பூக்களை தூவி அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். மேலும் உங்களுக்கே சாதகமாக தீர்ப்பு வரும் நாங்கள் அனைவரும் கடவுளை பிராத்திக்கின்றோம் என்று குரலை உயர்த்தினார்கள்.மேலும் சில பேர் கடவுளே உங்க பக்கம் தான் இருக்காரு என கூறினார்கள்.