Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

யோகா தினத்தன்று அனைவரும் நிச்சயம் இதை செய்ய வேண்டும்! பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்று 8 வருடங்கள் நிறைவடைந்திருக்கிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதுமுள்ள அனைத்து கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

அதில் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் முழுமையாக சென்று சேர்வதில் கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

அதோடு அரசாங்கத்தின் திட்டங்கள் பொது மக்களுக்கு எடுத்துக்கூறி அதன் பலன்களை பெறுமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும். கிராமத்திலுள்ள எல்லோரும் அரசின் திட்டங்களை பயன்படுத்தினால் அந்த கிராமம் வளர்ச்சி பாதையில் நடைபோடும் இதன் மூலமாக ஒட்டுமொத்த நாடும் வளர்ச்சியடையும் என்று தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

சென்ற 8 வருடங்களில் மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, கிராம சுவராஜ் எனப்படும் கிராம தன்னாட்சி மற்றும் மக்கள் நலப்பணிகளில் பல புதிய மைல் கற்களை நாம் எட்டியிருக்கிறோம்.

தூய்மை இந்தியா இயக்கத்தை கிராமங்களிலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதோடு நீர்நிலைகளை பாதுகாக்க பஞ்சாயத்து தலைவர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 நீர்நிலைகளை மேம்படுத்தி அதனை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

மேலும் எதிர்வரும் 21ஆம் தேதி 8வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படவுள்ளது. நோய்த்தொற்று பருவகாலத்தில் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் உணர்ந்திருக்கிறோம். யோகா மூலமாக பொதுமக்களுக்கு ஆரோக்கியமாக வாழ்வதற்கான வழி பிறக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் யோகா தினத்தன்று ஏதாவது ஒரு புராதான அல்லது சுற்றுலா இடத்தில் அல்லது நீர் நிலையை ஒட்டி இருக்கின்ற பகுதியில் கிராம மக்கள் எல்லோரையும் ஒன்றிணைத்து யோகா நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

Exit mobile version