1முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!
கடந்த ஒரு மாத காலமாகவே அனைத்து இடங்களிலும் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி முதல் தொடங்கி நிலையில் சென்னை ,செங்கல்பட்டு ,திருவள்ளூர் ,காஞ்சிபுரம் ,வேலூர் ,திருவண்ணமாலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது.
மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வரும் வெள்ளிக்கிழமை வரை கன மழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தற்போது வரையிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
அதனை தொடர்ந்து வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல கீழெடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தொடர் மழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 1முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு மட்டும் இன்று விடுமுறை என திருபத்தூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.