மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு! குதூகலத்தில் பள்ளி மாணவ மாணவிகள்!

Photo of author

By Sakthi

சமீபகாலமாகவே கோடைக்காலம் தொடங்கி விட்ட சூழ்நிலையில், தமிழ்நாடு முழுவதும் கடுமையான வெயில் பொதுமக்களை வாட்டி, வதைத்து வருகிறது.அதோடு மட்டுமல்லாமல் இந்த வெயில் காரணமாக, விவசாய பெருங்குடி மக்கள், விவசாய கூலி வேலை செய்து வருபவர்கள், கட்டிட வேலை செய்து வருபவர்கள், உள்ளிட்டோர் இந்த வெயிலினால் மிகக்கடுமையாகப்பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதோடு விவசாயமும் கடுமையாக பாதிப்பை சந்தித்து இருக்கிறது.எப்போதும் பங்குனி மாதத்தில் வெயில் சற்று கடுமையாக இருக்கும் என்பது நிதர்சனம். ஆனால் பங்குனி மாத தொடக்கத்தில் இந்த வெயில் சற்று அதிகரித்து காணப்பட்ட நிலையில், தற்போது பங்குனி மாதம் முடியவிருப்பதால் ஆங்காங்கே மழை பெய்ய தொடங்கியிருக்கிறது.

இருந்தாலும் கூட எதிர்வரும் சித்திரை மாதத்தில் வெயில் மிகவும் அதிகமாயிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் புவியின் வெப்பமயமாதல் அதிகமாகி வருவதால், கடல் மட்டம் உயர்வதற்கான வாய்ப்பிருக்கிறது என்று விஞ்ஞானிகள் பலரும் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய தமிழக மற்றும் இலங்கை கடலோர பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென் மாவட்டங்கள் உட்பட சில பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

சென்ற சில தினங்களாக வெயில் சுட்டெரித்து வந்த சூழ்நிலையில், இந்த மழையால் ஒரு சில பகுதிகளில் வெப்ப நிலை சற்றே குறைந்திருக்கிறது அதன் ஒரு கட்டமாக இன்று முதல் எதிர்வரும் 14ஆம் தேதி வரையில் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

அதனடிப்படையில், இன்றைய தினம் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் மாவட்டங்களான தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனி, ராமநாதபுரம், திருநெல்வேலி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது என சொல்லப்படுகிறது.

நாளைய தினம் முதல் வரும் வியாழன் வரையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், கனமழையின் காரணமாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் 1 முதல், 9ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, இன்று விடுமுறை வழங்கப்படுவதாக அந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் தம்புராஜ் தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version