Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வெள்ளம் பாதித்த பகுதி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை! அதிரடி அறிவிப்பு!

Holidays today for flood-affected area schools! Notice of Action!

Holidays today for flood-affected area schools! Notice of Action!

வெள்ளம் பாதித்த பகுதி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை! அதிரடி அறிவிப்பு!

கேரளாவில் ஏற்பட்ட கனமழை காரணமாக அருகில் உள்ள சில ஊர்களிலும் பெருத்த மழையின் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. அதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்திலும் பெருமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக அங்கு பல இடங்களில் வெல்ல நீர் சூழ்ந்து உள்ளது.

தற்போது கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில் கன்யாகுமரி மாவட்டத்தில் கன மழை பெய்து வருவதன் காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மாவட்டத்தில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் திங்கட்கிழமையான இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் பாதுகாப்பாக தங்களது வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார்.

Exit mobile version