தமிழக காவல்துறையினருக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட தமிழக அரசு!

0
249

தமிழக காவல்துறையினருக்கு வார விடுமுறை மற்றும் பிறந்த தின விடுமுறை மிகை நேர நேர ஊதியம் கொடுப்பது குறித்த அறிவிப்பு முன்பே சட்டசபையில் வெளியாகியிருந்தது. தற்சமயம் அதற்கான முறையான அரசாணை தமிழக அரசால் வெளியிடப்பட்டு இருக்கிறது அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

காவல் துறையைச் சார்ந்தவர்கள் தங்களுடைய உடல் நலனை பாதுகாக்க ஏதுவாகவும், காவல்துறையினர் தங்கள் குடும்பத்துடன் போதிய நேரம் செலவிடுவதற்கும், வாரத்தில் ஒருநாள் மாதாந்திர ஓய்வு கட்டாயமாக வழங்கப்பட வேண்டும். வார ஓய்வு தேவைப்படவில்லை என்று தெரிவிக்கும் காவலர்களுக்கும், ஓய்வு தினத்தன்று பணியிலிருக்கும் காவலர்களுக்கும், மிகை நேர ஊதியம் வழங்க வேண்டும்.

காவல் துறையைச் சார்ந்தவர்களின் பிறந்தநாள் மற்றும் திருமண தினங்களில் அவர்களுடைய குடும்பத்துடன் கொண்டாடுவதற்கு தகுந்தார் போல் அந்தந்த தினங்களில் அவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையின் சார்பாக பிறந்தநாள் மற்றும் திருமண நாள் வாழ்த்து செய்தி மாவட்ட மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையின் வானொலி மூலமாக சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலே கூறப்பட்டு இருக்கின்ற அறிவுரைகளை எல்லாம் மாநகர காவல் ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் தவறாமல் செயல்படுத்த வேண்டும் என்று அந்த அறிவிப்பில் சொல்லப்பட்டுள்ளது. வார விடுமுறை மட்டுமல்லாமல் பிறந்தநாள் மற்றும் விடுமுறை நேர ஊதியம் உட்பட பல அறிவிப்புகள் காவல்துறையினரை பெரிய அளவில் மகிழ்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறது.