5 நிமிடத்தில் பாத்ரூமே மணக்கும் Air Freshner வீட்டிலேயே செய்யலாம்!

0
134
Home Made Air Freshner in Tamil - Lifestyle News in Tamil

5 நிமிடத்தில் பாத்ரூமே மணக்கும் Air Freshner வீட்டிலேயே செய்யலாம்!

நாம் கடையில் வாங்கி பயன்படுத்தும் ஏர் ஃப்ரெஷ்னர் ஒரு வாரம் கூட இருப்பதில்லை. வாரத்தில் உருகி அதன் மனமும் அதிகமாக வருவதில்லை.

நான் வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை பயன்படுத்தி வீட்டிலேயே ஏர் ஃப்ரெஷ்னர் எப்படி தயாரிக்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

1. கற்பூரம் 12
2. பேக்கிங் சோடா 2 ஸ்பூன்
3. நாப்தலின் பால் 12
4. எசன்ஸ்
5. கலர் பவுடர்
6. Comfort 1 பாக்கெட்
7. White Glu( பேப்பர் ஒட்ட பயன்படுவது)

செய்முறை:

1. முதலில் ஒரு உரலை எடுத்துக் கொள்ளவும். நன்கு சுத்தம் செய்து ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
2. அதில் 12 அளவிற்கு கற்பூரம் வில்லைகளை எடுத்து பொடித்து கொள்ளவும்.
3. பின் ஒரு பௌலில் அதனை சேர்த்துக் கொள்ளவும்.
4. பின் அந்த கற்பூர பொடியோடு இரண்டு ஸ்பூன் அளவுக்கு பேக்கிங் சோடாவை சேர்த்துக் கொள்ளவும்.
5. பின் பன்னெண்டு அளவிற்கு நாப்தலின் பால் என்று சொல்ல கூடிய பூச்சி உருண்டையை எடுத்து நன்றாக உரலில் போட்டு பொடித்துக் கொள்ளவும். பின் அதனை கற்பூர கலவைகளோடு சேர்த்துக் கொள்ளவும்.

6. பின் உங்களுக்கு என்ன நறுமணம் மிகவும் பிடிக்குமோ அந்த நறுமணத்தின் எசன்ஸ் ஒரு ஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ளவும்.
7. உங்களுக்கு கலர் வேண்டுமென்றால் வீட்டில் கலர் இருந்தால் சேர்த்து கொள்ளவும் அப்படி இல்லை எனில் வெள்ளை கலர் போதும் என்றால் அதை வைத்துக் கொள்ளவும்.
8. நாம் துணி துவைத்த பின் துணிகளின் நறுமணத்திற்காக சேர்த்துக் கொள்ளும் கம்ஃபோர்ட் ஒரு பாக்கெட் சேர்த்துக் கொள்ளவும்.
9. பின் பேப்பரை ஒட்ட பயன்படுத்தப்படும் பசையை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
10. அதனை பார்ப்பதற்கு மண்பானை செய்ய பயன்படும் மண்ணைப் போல ஈரப்பதத்தோடு இருக்க வேண்டும். தண்ணீர் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டாம்.

11. இதனை பிளாஸ்டிக் டீ கப் உள்ளதல்லவா அதனை போட்டு நிரப்பி வெயிலில் ஒருநாள் காய வைக்கவும்.
12. இப்பொழுது புதிதாக ஒரு பிளாஸ்டிக் டீ கப் எடுத்துக் கொள்ளவும்.
13. அதில் அடிப்பக்கமும் அடிப்பக்கத்தில் மேலே ஒரு சுற்றளவு சிறு குண்டூசிகளை வைத்து ஓட்டை போட்டுக் கொள்ளவும்.
14. காய வைத்த பொருளை இப்பொழுது பார்த்தோம் என்றால் கட்டியாகி இருக்கும்.
15. அதனை ஓட்டை போட்டு வைத்துள்ள டீ காப்பிற்குள்ளே போட்டுக் கொள்ளவும்.
16. நீங்கள் அதனை பாத்ரூமில் அப்படியே வைத்துக் கொள்ளலாம். அப்படி இல்லை எனில் டீ காபி மேற்புறம் இரண்டு பக்கங்களிலும் துலையிட்டு கயிறு கட்டிவிட்டு தொங்க விட்டுக் கொள்ளலாம்.

இதனை மட்டும் பயன்படுத்தி பாருங்கள். பாத்ரூமிற்குள் வரும் கரப்பான் பூச்சி மற்றும் மற்ற எந்த பூச்சிகளும் வராது.

Home Made Air Freshner in Tamil