இயற்கையாக பாத்திரம் கழுவும் திரவம்! பளிச்சுன்னு எண்ணெய் பசை போக இத பண்ணுங்க!

0
196

இயற்கையாக பாத்திரம் கழுவும் திரவம்! பளிச்சுன்னு எண்ணெய் பசை போக இத பண்ணுங்க!

நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய பாத்திரம் கழுவும் திரவமானது வேதிப் பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது.

அதை நாம் பயன்படுத்தும் பொழுது வருங்காலத்தில் வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மிகவும் எளிமையான முறையில் பாத்திரம் கழுவும் திரவத்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

1. எலுமிச்சை பழம் 4

2. பூந்திக்கொட்டை 100 கிராம்

3. கல் உப்பு ஒரு கப்

4. வினிகர் ஒரு கப்

செய்முறை:

1. முதலில் 4 எலுமிச்சை பழத்தை எடுத்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். உள்ளே உள்ள விதையை நீக்கி விடுங்கள்.

2. இப்பொழுது பூந்திக் கொட்டையை எடுத்து அதை இடித்தால் உள்ளே கொட்டை கருப்பு நிறத்தில் இருக்கும். அதை நீக்கி விட்டு மேலே உள்ள தோலை ஒரு முறை கழுவி விட்டு அதை எலுமிச்சை பழம் உள்ள பாத்திரத்தில் போடவும்.

3. இப்பொழுது அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து நன்கு காய்ச்சவும். ஒன்றரை லிட்டர் தண்ணீர் ஒரு லிட்டர் வரும் வரை நன்கு காய்ச்சவும்.

4. பூந்திக்கொட்டையை சேர்த்து இருப்பதனால் அதிக நுரை வரும் அதனால் அதனை கிளறிக் கொண்டே இருக்கவும்.

5. இப்பொழுது அடுப்பை அணைத்து விட்டு தண்ணீரை வடிகட்டி மீதமுள்ள எலுமிச்சை மற்றும் பூந்திக்கொட்டையை மிக்ஸியில் போட்டு அரைத்து மறுபடியும் எடுத்து வைத்த தண்ணீரையும் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.

6. 5 நிமிடம் கொதித்தவுடன் கல் உப்பு ஒரு கப் சேர்த்து மறுபடியும் கொதிக்க விடவும். இந்துப்பு இருந்தாலும் எடுத்துக் கொள்ளலாம்.

7. பின் ஒரு கப் வினிகரை ஊற்றவும்.

8. வினிகர் இந்த திரவம் கெடாமல் இருப்பதற்காக சேர்கிறோம்.

9.  5 நிமிடம் கொதித்தவுடன் இப்பொழுது அந்தத் தண்ணீரை வடிகட்டி வெளியே வைத்துக்கொள்ளலாம். ஒரு மாதத்திற்கு வரும். கெடாமலும் இருக்கும்.

இந்த இயற்கையான முறையை பயன்படுத்தி நீங்கள் பாத்திரத்தைக் கழுவும்போது பாத்திரம் மிகவும் சுத்தமாகவும் இருக்கும். அதிக நுரை வராது என்பதால் தண்ணீர் குறைவாக செலவு செய்யப்படும்.