குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்கும் ஹோம் மேட் சத்துமாவு உருண்டை!!

0
84
Home made satumavu balls to increase children's body weight!!

இப்பொழுது உள்ள குழந்தைகள் என்ன சாப்பிட்டாலும் உடல் எடை கூடவில்லை என்பது பெற்றோர்களின் பெரும் கவலையாக இருக்கிறது.இங்கு தரப்பட்டுள்ள சத்துமாவு செய்முறையை பின்பற்றி லட்டு செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால் உடல் எடை வேகமாக அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:

1)மக்காசோளம்
2)கோதுமை
3)பாதாம் பருப்பு
4)முந்திரி பருப்பு
5)பிஸ்தா பருப்பு
6)வெள்ளை சோளம்
7)பேரிச்சம் பழம்
8)பொட்டுக்கடலை
9)பனைவெல்லம்

செய்முறை விளக்கம்:

அடுப்பில் வாணலி வைத்து அரை கப் மக்காசோளம் சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளவும்.

அதேபோல் அரை கப் கோதுமை,10 பாதாம் பருப்பு,10 முந்திரி பருப்பு,10 பிஸ்தா பருப்பு,அரை கப் சோளம்,அரை கப் பொட்டுக்கடலையை தனித் தனியாக வறுத்துக் கொள்ளவும்.

பிறகு இதனை நன்கு ஆறவிட்டு ஒரு மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.நைஸ் பவுடராக அரைக்க வேண்டும்.இதை ஒரு டப்பாவில் கொட்டி சேமித்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு மிக்சர் ஜாரில் ஐந்து விதை நீக்கிய பேரிச்சம் பழம் மற்றும் இரண்டு தேக்கரண்டி பனைவெல்லம் சேர்த்துக் கொள்ளவும்.

அதற்கு அடுத்து அரைத்த சத்துமாவு பவுடர் 25 கிராம் அளவிற்கு சேர்த்து அரைக்கவும்.இதை ஒரு தட்டில் கொட்டி கொள்ளவும்.பிறகு கையில் நெய் தடவிக் கொண்டு அரைத்த சத்துமாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி குழந்தைகளுக்கு கொடுக்கவும்.

இந்த சத்துமாவு உருண்டையை தினமும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்களின் உடல் எடை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்கும்.