Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மங்கு, தேமல் மறைய வீட்டிலேயே வேம்பு சோப் தயாரிக்கும் முறை!

#image_title

வைட்டமின் பி2 குறைபாட்டின் காரணமாகத் தோலில் கரும்புள்ளிகள் தோன்றும். வைட்டமின் பி6 குறைபாட்டால் தேமல், அரிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

 

சரிவிகித ஊட்டச்சத்து உணவை எடுத்துக்கொள்ளுங்கள், தினமும் குறைந்தது 8 மணி நேரம் தூங்குங்கள். இதைச் செய்தால், கோடை வெயிலிலும் உங்கள் சருமம் குளிர்ச்சியாக இருக்கும்.

 

வீட்டிலேயே தேம்பல் மற்றும் மங்கு சரி செய்யக்கூடிய சோப்பு தயாரிக்கும் முறையை பற்றி பார்க்கலாம்

 

தேவையான பொருட்கள்:

 

சோப் பேஸ்- தேவையான அளவு

வேப்பிலை – 5 கைப்பிடி

குப்பைமேனி இலை கைப்பிடி

மஞ்சள் – அரை ஸ்பூன்

 

செய்முறை:

 

1. முதலில் மிக்ஸி ஜாரில் ஐந்து கைப்பிடி அளவு வேப்பிலையை தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளுங்கள்.

2. அதனுடன் ஒரு கைப்பிடி அளவு குப்பைமேனி இலைகளை நன்றாக அலசிவிட்டு சேர்த்துக் கொள்ளுங்கள்

3. அரை டீஸ்பூன் அளவிற்கு மஞ்சள் சேர்த்து மறுபடியும் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.

4. இதை வடிகட்டி தனியாக எடுத்துக் கொள்ளுங்கள்.

5. இப்பொழுது சோப்பு பேசை எடுத்த டபுள் பாய்லர் முறையில் சோப்பு பேசை கரைய வையுங்கள்.

6. சோப்பு பேஸ் கரைந்தவுடன் வடிகட்டி வைத்திருந்த வேப்பிலையை இதில் ஊற்றி இரண்டு நிமிடம் கொதிக்க வையுங்கள்.

7. பின் உங்களுக்கு எந்த மோல்ட் வேண்டுமோ அந்த மொல்டில் ஊற்றிக் கொள்ளலாம். இல்லை மோல்ட் இல்லை என்றால் பேப்பர் கப்பில் ஊற்றி வைத்துக் கொள்ளலாம்.

8. இதை 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை அப்படியே விட்டு விடுங்கள்

9. அவ்வளவுதான் சோப் ரெடி நீங்கள் இதை தினமும் குளிக்கும் பொழுது பயன்படுத்துங்கள். உங்களுக்கு வேண்டுமென்றால் வாசனை திரவியம் சேர்த்துக் கொள்ளலாம். விட்டமின் ஈ கேப்ஸ்யூல் கூட சேர்த்துக் கொள்ளலாம்.

Exit mobile version