Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரத்த குழாய் அடைப்பு நீங்க வியக்கவைக்கும் ஆயுர்வேத மருத்துவம்!

ரத்த குழாய் அடைப்பு என்பது அதிகமாக உடல் எடை உடையவர்கள் மற்றும் புகைப் பழக்கம் உடையவர்கள், உணவு உண்ணாமல் இருப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள் ஆகியோருக்கு ரத்த குழாய் அடைப்பு அதிகமாக ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இப்போது இதனை சரி செய்ய கூடிய இயற்கை மருத்துவத்தை தான் பார்க்கப் போகின்றோம்.

 

அறுவை சிகிச்சை இல்லாமல் ரத்தத்தில் உள்ள கொழுப்பு நீங்கி அடைப்புகளும் நீங்கும். உங்களுக்கு உயிருக்கு உத்தரவாதம் அளிக்கும் இந்த ஒரு மருத்துவம் மிகப் பெரிய வியக்க வைக்கும் அதிசயம் தான் என்று சொல்ல வேண்டும்.

 

டாக்டரிடம் சென்று லட்சத்திற்கும் மேல் பணத்தை செலவழிக்காமல் இயற்கையிலேயே ஆயுர்வேத மருத்துவத்தில் சொல்லப்பட்ட இந்த ஒரு மருந்து சாப்பிட்டு வரும் பொழுது கண்டிப்பாக இரத்தக் குழாயில் உள்ள அடைப்பு நீங்கி சுகமாக வாழும் வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கும்.

 

தேவையான பொருட்கள்:

 

1. ஒரு கப் எலுமிச்சை சாறு

2. ஒரு கப் இஞ்சி சாறு

3. ஒரு கப் பூண்டு சாறு

4. ஒரு கப் ஆப்பிள் சீடர் வினிகர்.

 

செய்முறை:

 

1. மேலே கூறப்பட்டுள்ள எலுமிச்சை சாறு, இஞ்சி சாறு, பூண்டு சாறு, ஆப்பிள் சீடர் வினிகர் அனைத்தையும் கலந்து கொள்ளவும்.

2. ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் இந்த சாறுகளை ஊற்றி அடுப்பில் வைத்து மிதமான இளம் சூட்டில் 60 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

3. நான்கு கப் அளவு 3 கப் அளவாக குறையும்.

4. சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளவும்.

5. இதை தினமும் காலை சாப்பாட்டிற்கு முன் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து சாப்பிடுங்கள்.

6. இதை தொடர்ந்து சாப்பிட்டு வர நீங்களே உங்கள் உடலில் ஏற்படும் மாற்றத்தை உணர்வீர்கள்.

Exit mobile version