Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முள்போல் குத்தும் பாதவெடிப்பு சரியாக அற்புதமான மருந்து! 101% Result!

அனைவருக்கும் பாதவெடிப்பை இருக்கும். ஆனால் அது ஏன் ஏற்படுகிறது? எதனால் இந்த பாதவெடிப்பபு வருகிறது என்றுதான் யாருக்கும் தெரியாதது. மற்றும் யாரும் தெரிந்து கொள்ளவும் நினைக்காதது. உடலில் உள்ள நீர் வற்றுவது, அதிக உடல் எடையும் தான் பாத வெடிப்புக்கு முக்கிய காரணியாக அமைகின்றது.

இப்பொழுது அப்படி பனி காலத்தில் வரும் பாதவெடிப்பை எப்படி சரி செய்வது என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. இந்த பதிவு முழுக்க முழுக்க இயற்கை முறையை கொண்டே பயன்படுத்தப்படுகிறது நீங்கள் பயன்படுத்தி பயன்பெறுங்கள்.

 

 

முறை 1:

 

1. முதலில் ஒரு பவுலை எடுத்துக் கொள்ளவும்.

2. ஒரு டீஸ்பூன் அளவிற்கு கல் உப்பை போடவும்.

3. அந்த கல்லுப்பில் 3 சொட்டு தண்ணீர் விடவும்.

4. தண்ணீர் விட்டு அதில் கொஞ்சம் கரைந்த தண்ணீரோடு கலந்து வரும் உப்பை எடுத்து பாத வெடிப்பு உள்ள இடத்தில் நன்றாகத் தேய்த்துக் கழுவிவிடவும்.

5. பெரியதாக இருக்கும் கல் உப்பை பயன்படுத்த வேண்டாம். அது மறுபடியும் புண்ணாக்கிவிடும்.

 

முறை 2: 

 

1. முதலில் ஒரு பவுலை எடுத்துக் கொள்ளவும்.

2. அதில் ஒரு ஸ்பூன் அளவுக்கு விளக்கெண்ணையை ஊற்றவும்.

3. ஒரு ஸ்பூன் அளவிற்கு கற்றாழை ஜெல்லை போடவும்.

4. அரை ஸ்பூன் அளவிற்கு மஞ்சளை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

இந்த கலவையை தூங்கப் போவதற்கு ஒரு மணிநேரம் முன் பூசிவிட்டு படுத்துக்கொள்ளலாம். அடுத்த நாள் காலையில் எழுந்து இதனை கழுவி விடலாம். இப்படி ஏழு நாட்கள் தொடர்ந்து செய்துவர உங்கள் பாதத்தில் வெடிப்பு இருந்த இடமே தெரியாமல் கால் மிகவும் அழகு பெறும்.

Exit mobile version