வெற்றிலையோடு இந்த எண்ணெயை தலைக்கு தடவி வந்தால் ஒரு முடிகூட கொட்டாது! நன்கு அடர்த்தியாக வளரும்
முடி கொட்டாமல் இருப்பதற்கு முடி நன்கு நீண்டு வளர்வதற்கும் எத்தனையோ இயற்கை முறைகளையோ அல்லது செயற்கை முறைகளை பயன்படுத்தி இருப்பீர்கள். ஆனால் இந்த முறையானது உங்களுக்கு ஒரு மிகச் சிறந்த தீர்வாக இருக்கும். இதற்கு தேவையானவை வீட்டில் உள்ள சிறு பொருட்களே தான். இதை நீங்கள் பயன்படுத்தி வரும் பொழுது ஒரு முடி கொட்டாது. முடி நீண்டுவளரும். தலையில் ஏதாவது பேன், பொடுகு ஏதாவது இருந்தாலும் இது உங்களுக்கு முற்றிலுமாக நீங்கிவிடும்.
தேவையான பொருட்கள்:
1. வெற்றிலை 4
2. செம்பருத்தி இலை 4
3. கறிவேப்பிலை ஒரு கைப்பிடி
4. தேங்காய் எண்ணெய்.
செய்முறை:
1. வெற்றிலை நான்கு இலைகளை காம்பை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2. செம்பருத்தி இலைகளை காம்பு நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஓரிதழ் பூவின் நிலையானது மிகவும் சிறந்தது.
3. ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலையை எடுத்து கொள்ளவும்.
4. இப்பொழுது ஒரு பாத்திரத்தில் 50 மில்லி அளவு தேங்காய் எண்ணையை ஊற்றி அடுப்பில் வைத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்த வெற்றிலை செம்பருத்தி இலை வேப்பிலை ஆகிய அனைத்தும் எண்ணெயில் போட வேண்டும்.
5. மிதமான தீயில் ஐந்து முதல் எட்டு நிமிடம் வரை வதக்க வேண்டும்.
6. இலைகள் நன்கு வதங்கியவுடன் எண்ணெயின் நிறம் பச்சை நிறமாக மாறி இருக்கும்.
7. அடுப்பிலிருந்து இறக்கி எண்ணெயை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
8. இப்பொழுது இந்த எண்ணெயை சூடு ஆறிய பின் இரவில் நன்கு தலைக்கு வேர்க்கால்களில் படும்படி வைத்துக் கொண்டு காலையில் நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு கொண்டு தலைக்குக் குளித்து விடலாம்.
9. இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை நீங்கள் செய்து வரும் பொழுது கண்டிப்பாக உங்களது முடி கொட்டாமல் நீண்டு வளர இது உதவி செய்யும்.