Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாத்திரை சாப்பிட்டு வாய் புண்ணா போச்சா! இப்படி வாய் கொப்பளிக்க புண் மாயமாகும்!

அதிக வீரியமுள்ள மாத்திரைகளை சாப்பிடுவதன் மூலம் வாய் மற்றும் வயிற்று பகுதி புண்ணாகிறது. வாய்ப்புண் சாதாரணமாக வருவதில்லை. வாய்ப்புண் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. அதிகம் வீரியமிக்க மாத்திரைகள் சாப்பிடுவதாலும், அஜீரணம் போன்ற பிரச்சனைகளால், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளால் , உடற்சூடு, வைட்டமின் சத்துக் குறைபாடுகள் ஆகியவற்றால் வாய்ப் புண்கள் எளிதில் ஏற்பட்டு விடுகின்றன.புகையிலை, பான் மசாலா, புகைபிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், வெற்றிலை, போடுபவர்கள், சர்க்கரை நோயாளிகள் ஆகியோருக்கு வரலாம்.

இப்படி வரும் வாய்ப்புண்ணை வீட்டிலேயே எளிமையாக சரி செய்யக் கூடிய எளிய மருத்துவத்தை பார்க்கப் போகின்றோம்.
தேவையான பொருட்கள்:
1. திப்பிலி 2 கிராம்
2. உலர்த்திய மலைநெல்லி 1
3. தேன்.

செய்முறை:
1. முதலில் திப்பிலி மற்றும் உலர்த்திய மலை நெல்லி இரண்டையும் எடுத்துக் கொள்ளுங்கள்.
2. இவை இரண்டையும் ஒரு ஸ்பூன் அளவுக்கு தேன் விட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.
3. அரைத்த இந்த விழுதை இரவில் படுக்க செல்லும் முன் வாயில் வைத்துக் கொள்ளுங்கள்.
4. வாயில் வைத்து இருக்கும் பொழுது நன்கு உமிழ் நீர் சுரக்கும். உமிழ்நீரை விழுங்காமல் வாயில் வைத்து நன்றாக கொப்பளியுங்கள்.
5. கழிவுகள் சேர்ந்ததும் வாயில் உள்ள உமிழ் நீரை துப்பி விடுங்கள்.
6. பிறகு நன்கு வாயை கொப்பளித்து கொள்ளுங்கள்.
7. இவ்வாறு செய்யும்பொழுது வாயில் உள்ள அழுக்குகள் நீங்கி புண்கள் விரைவில் சரியாகிவிடும்.

இப்படி வாரம் முழுக்க செய்து வரும் பொழுது வாய்ப்புண் விரைவில் குணமடையும்.

 

Exit mobile version