நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும், சளி இருமல் வராது, அற்புதமான சூப்

0
159

இன்றைய காலகட்டத்தில் எந்த நோய் எப்படி வருகிறது என்று யாருக்கும் தெரியாது. நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதுதான் இன்றைய காலகட்டத்தில் நிலை. வீட்டில் சும்மா இருக்கும் பொழுது ஐந்தே நிமிடத்தில் இந்த இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய சூப்பை செய்து வீட்டில் இருப்பவர்களுக்கும் கொடுத்து உண்டு வாருங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சளி-இருமல் எட்டிப்பார்க்காது.

தேவையான பொருட்கள்:

1. சின்ன வெங்காயம் 6/7

2. தக்காளி ஒன்று

3. பூண்டு 4 பல்

4. மிளகுப் பொடி அரை ஸ்பூன்

5. சீரகப் பொடி அரை ஸ்பூன்

செய்முறை:

1. முதலில் சின்ன உரலில் சின்ன வெங்காயம் 6 அல்லது 7 எடுத்து கொள்ளவும்.

2. பின் அதில் நான்கு பல் பூண்டை போட்டு கொள்ளவும்.

3. இவற்றை நன்றாக இடித்து கொள்ளவும்.

4. பின் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் இடித்து வைத்த வெங்காயம் மற்றும் பூண்டை போடவும்.

5. ஒரு தக்காளியை எடுத்து பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்.

6. பின் 1/2 ஸ்பூன் மிளகு பொடியை சேர்த்து கொள்ளவும்.

7. பின் 1/2 ஸ்பூன் சீரகம் பொடியை சேர்த்து கொள்ளவும்.

8. பின் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து மிதமான தீயில் நன்கு கொதிக்க விடவும்.

9. 1 டம்ளர் நீர் முக்கால் பாகம் ஆகும் வரை மிதமான தீயில் வைத்து வேக விடவும்.

10. வெந்ததும் ஒரு டம்ளரில் ஊற்றி கொள்ளவும்.

11. தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.

12. இதனை நீங்கள் மிதமான சூட்டில் பருகலாம். குழந்தைகளுக்கு சூப் கொடுக்கவும். பெரியவர்கள் என்றால் அனைத்தையும் சேர்த்து சாப்பிட்டு பருகவும்.

இதனை நீங்கள் தினமும் பருகலாம். எப்பொழுது தேவையோ அப்பொழுது குடிக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சளி மற்றும் இருமல் வரவே வராது.