Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிறுநீர் கழிக்கும் போது எரியுதா? ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதை சாப்பிடுங்க!

நமது உடலில் சிறு நீரகம் மிகப் பெரிய வேலையை செய்து வருகின்றது. அப்படி சிறுநீரகம் பழுதடைதல் ஏகப்பட்ட நோய்கள் வந்துவிடுகின்றன. சிறுநீரகக் கல், சிறுநீரகம் பழுதடைதல், சிறுநீர் கடுப்பு, சிறுநீர் எரிச்சல், சிறுநீர் தாரை எரிச்சல் என பலவகையான நோய்கள் பல்வேறு உணவு பழக்கங்கள் மற்றும் இதர பழக்கங்களால் வருகின்றது.

பொதுவாக சர்க்கரை உள்ளவர்களுக்கு அந்த இடத்தில் ஒரு சிலை எரிச்சல் மற்றும் கடுகடுப்பு இருந்து கொண்டே இருக்கும்.அதை வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எப்படி குணப்படுத்தலாம் என்பதைப் பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்

 

தேவையான பொருட்கள்:

1. வெண்டைக்காய் விதை

2. அரிசிக் கஞ்சி

 

செய்முறை:

1. முதலில் வெண்டை காயை எடுத்து உள்ளே உள்ள விதைகளை மட்டும் தனியே எடுத்துக் கொள்ளுங்கள்.

2. பின் சாதம் வடித்த அரிசி கஞ்சி தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள்.

3. அரிசி கஞ்சியுடன் எடுத்து வைத்த வெண்டைக்காய் விதைகளை போட்டு நன்றாக கொதிக்க வையுங்கள்.

4. 10 நிமிடம் கொதித்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள்.

5. தினமும் காலையில் சாப்பிடுவதற்கு முன் 100 மில்லி அளவு இதனை குடித்து வாருங்கள்.

6. ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த வைத்திய முறையை செய்து வரும் பொழுது சிறுநீர் கடுப்பு சிறுநீர் தாரை எரிச்சல் ஆகியவை இருக்கவே இருக்காது.

Exit mobile version