மூல நோய்க்கு அற்புதமான வீட்டு வைத்தியம்!

0
170

பல்வேறு உணவு மாற்றங்களால்தான் மூல நோய் வருகின்றது. மூல நோயினால் வரும் வலி வந்தவர்கள்தான் உணர முடியும். உட்கார முடியாமல் ஒரு மாதிரியான உறுத்தல் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். அதே போல் மலம் கழிக்கும்பொழுது அதிகப்படியான உதிரப்போக்கு இருக்கும். மலப்பாதை புண்ணாகிவிடும். இந்த மாதிரியான பிரச்சனைகளை தீர்க்கும் வழியாகத்தான் இந்த எளிய முறையை பயன்படுத்த போகின்றோம்.

தேவையான பொருட்கள்:

1. பிரண்டை 500 கிராம்

2. சுக்கு 10 கிராம்

3. மிளகு 10 கிராம்

4. ஓமம் 10 கிராம்

5. பெருங்காயம் 10 கிராம்

6. மஞ்சள் 10 கிராம்

 

செய்முறை:

1. பிரண்டையை முதலில் மோரில் ஊறவைத்து அதை உலர்த்தி 500 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

2. உலர்த்தி காய்ந்த பிரண்டை உடன்,சுக்கு, மிளகு,ஓமம், பெருங்காயம், மஞ்சள் ஆகியவை சேர்த்து நன்கு பொடியாக்கிக் கொள்ளவும்.

3. இந்த பொடியை கண்ணாடி பாட்டில்களில் சேமித்து வைத்துக் கொள்ளவும்.

4. இந்தப் பொடியை தினமும் காலை மாலை இரு வேளையும் உணவுக்குப் பின் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் அனைத்து மூல நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.

5. பிரண்டையை உணவாக உண்ண முடியாதவர்கள் சூரணமாக செய்து சாப்பிடலாம்.

6. இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது மூல நோயில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும்.