படர்தாமரை என்பது டீனியா என்ற பூஞ்சைத் தொற்றால் உண்டாகிறது. இது உடல் முழுவதும் படர்ந்து காணப்படுவதால்தான் படர்தாமரை என்று அழைக்கப்படுகிறது. உடம்பில் சிவப்பு திட்டுகளாக காட்சியளிக்கும். சொறிந்தால் தண்ணீர் வரும் அந்த தண்ணீர் இன்னொரு இடத்தில் படும் பொழுது அங்கு மறுபடியும் பூஞ்சை தொற்று ஏற்பட்டு படர்தாமரை படரும். சித்த வைத்திய முறைகளில் இதற்கான தீர்வுகளை பார்ப்போம். நிறைய குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் எது உங்களால் முடியுமோ அதனை பயன்படுத்தி படர்தாமரையை நீக்கிக் கொள்ளலாம்.
1. சீமை அகத்தி இலையை எடுத்து அரைத்து சாறெடுத்து அந்த சாற்றுடன் தேங்காய் எண்ணெய் கலந்து பூசி வரலாம்.
2. புங்க மர விதையை அரைத்து தோலில் பூசி வரலாம்.
3. பூண்டை தேனுடன் சேர்த்து அரைத்து தடவி வரலாம்.
4. அருகம்புல் இருந்தால் அருகம்புல்லை எடுத்து மஞ்சள் சேர்த்து அரைத்து பூசி வரலாம்.
5. ஜாதிக்காயை அரைத்து தேன் சேர்த்து பூசி வரலாம்.
6. சந்தனக் கட்டையை எலுமிச்சை பழம் சாறு சேர்த்து அரைத்து பூசி வரலாம்.
7. ஆகாயத் தாமரை இலையைக் காடி விட்டு அரைத்து பூசலாம்.
8. யூகலிப்டஸ் இலையில் உள்ள வேதிப்பொருட்கள் படர்தாமரையை பூஞ்சைகளை கொள்ளும் தன்மையுடையது அதனால் யூக்கலிப்டஸ் எண்ணெய்யை படர்தாமரை மீது பூசி வர குணமாகும்.
9. துளசி இலையுடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து படர்தாமரை மீது பூசலாம்.
10. மாதுளை பழத் தோலையும் வல்லாரைக் கீரையும் சம அளவில் எடுத்து படர்தாமரை மீது அரைத்து பூசி வர குணமாகும்.
11. நான்கைந்து கிராம்பை எடுத்து அரைத்து தோலில் பூசி வர படர்தாமரை சரியாகும்.
12. லவங்கப் பட்டையை நீர் விட்டு மைய அரைத்து பூசி வரலாம்.
இந்த குறிப்புகளில் எந்த குறிப்புகள் உங்களால் முடியுமோ அதனை பயன்படுத்தி வர தொடர்ந்து ஏழு நாட்கள் செய்து வர உங்களுக்கு மாற்றங்கள் தெரியும்.
அதோடு ஒரு சில வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். படர்தாமரை வராமல் இருக்க தலை மற்றும் கை கால் நகங்கள் சுத்தமாக இருக்க வேண்டும்.
உலர்ந்த காய்ந்த ஆடைகளை அணியவும். பிறர் பயன்படுத்திய உபகரணங்கள் ஆடைகள் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாம்.