Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சைனஸ், அடுக்கு தும்மல், ஆஸ்துமா நீங்க நாட்டு மருத்துவம்

சைனஸ், அடுக்கு தும்மல், ஆஸ்துமா நீங்க நாட்டு மருத்துவம்

மூச்சுக்குழல் மற்றும் நுரையீரலில் பாதிப்புகள் ஏற்படுவதால் சைனஸ் மற்றும் அடுக்குத் தும்மல், ஆஸ்துமா போன்ற நோய்கள் வருகின்றன. இது சுவாசப் பாதையை தாக்குகின்றது. அதனால் மூச்சிரைத்தல், இருமல், அடுக்குத் தும்மல், சைனஸ் போன்ற பிரச்சினைகள் வருகின்றது.
புகை மற்றும் தூசிகளால் பாதிக்கப்பட்ட சுவாசப்பாதை குறுக்கம் அடைவதால் உடம்பினுள்ளே காற்று செல்ல தடைபட்டு மற்ற உறுப்புகளுக்கு பிராண வாயு குறைவாக கிடைக்கிறது. அதனால் மூச்சு இரைத்தல்,மூச்சு விட முடியாமல் சிரமப்படுதல் போன்ற நோய்கள் வருகின்றன.
தேவையான பொருட்கள்:
1. வில்வ வேர் 50 கிராம்
2. தூதுவளை வேர் 50 கிராம்.
3. கண்டங்கத்திரி வேர் 50 கிராம்
4. முசுமுசுக்கை வேர் 50 கிராம்
5. மிளகு 50 கிராம்
6. மஞ்சள் 50 கிராம்

செய்முறை:
1. மேலே கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் வாங்கி ஒன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.
2. இதனை காலை மாலை என இருவேளையும் ஒரு ஸ்பூன் அளவு தேனில் குழைத்து சாப்பிட்டு வர நிச்சயமாக ஆத்துமா போன்ற பிரச்சினைகள் பறந்து மாயமாய் ஓடிவிடும்.
3. இது சளிக்கட்டு,தும்மல், சைனஸ், ஆஸ்துமா, காச நோய் போன்றவற்றையும் மறையச் செய்யும்.

Exit mobile version