Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தினமும் இரவில் இரண்டு சொட்டு தடவினால் காலையில் முகம் பளபளக்கும்! தோல் சுருக்கம் மறையும்!

ஒரு சிலர் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பார்கள். ஆனால் அவர்களின் முகத்தில் உள்ள முகப்பருக்கள் மற்றும் கருவளையங்கள் தோல் சுருக்கங்கள் அவர்களது அழகையே கெடுக்கும்.முகத்தில் உள்ள தோல் சுருக்கம் மற்றும் கருவளையம் கரும்புள்ளிகள் ஆகியவற்றை மூன்றே நாட்களில் நீக்கக் கூடிய அற்புதமான இயற்கையான இரவில் பயன்படுத்தக்கூடிய Night Cream தான் இப்பொழுது நாம் பார்க்கப் போகின்றோம்

 

தேவையான பொருட்கள்:

1. வெந்தய தண்ணீர்

2. ஒரு ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள்

3. இரண்டு ஸ்பூன் கற்றாழை ஜெல்.

செய்முறை:

1. முதலில் வெந்தயத்தை இரண்டு முறை நன்கு கழுவி விட்டு ஒரு இரவு முழுவதும் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.

2. ஊறவைத்த தண்ணீர் மட்டுமே நமக்கு தேவை. அதனால் ஊற வைத்த தண்ணீர் மட்டும் 3 ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும்.

3. இதில் அரை ஸ்பூன் அளவிற்கு கஸ்தூரி மஞ்சள் சேர்த்துக் கொள்ளவும்.

4. பின் இரண்டு ஸ்பூன் அளவிற்கு கற்றாழை ஜெல் சேர்த்துக் கொள்ளவும்.

5. நன்றாக கிரீம் பதத்திற்கு கலந்து கொள்ளவும்.

6. இதை கண்ணாடி பாட்டில்களில் சேமித்து வைத்துக் கொள்ளவும்.

7. ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.

இந்த க்ரீமை இரவு படுக்கச் செல்லும் முன் 2 சொட்டு எடுத்து முகம் மற்றும் கழுத்து முழுவதும் தேய்த்து விட்டு காலையில் கழுவிக் கொள்ளலாம்.

இப்படி 3 நாட்கள் தொடர்ந்து செய்து வர உங்களது முகம் மிகவும் பளபளப்பாகவும், கரும்புள்ளிகளும், முகப்பருக்கள் இல்லாமலும், தோல் சுருக்கம் மறைந்து மிகவும் கலகலப்பாகவும் இளமைத் தோற்றத்துடனும் காணப்படும்.

Exit mobile version