Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிறுநீர் தொற்றால் அவதிப்படுகிறீர்களா? கவலை வேண்டாம் விரைவில் குணமாக சில வீட்டு வைத்தியம்!

சிறுநீர் தொற்றால் அவதிப்படுகிறீர்களா? கவலை வேண்டாம் விரைவில் குணமாக சில வீட்டு வைத்தியம்!

தற்போது பலரும் சிறுநீர் தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.சிறுநீர் தொற்று பல்வேறு காரணங்களினால் ஏற்படுகிறது அதாவது அதிக நேரம் சிறுநீரை அடக்கி வைப்பது,உடலிலிருக்கு போதுமான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளாதது,போன்ற பல்வேறு காரணங்களால் சிறுநீர் தொற்று ஏற்படுகிறது.

இந்த சிறுநீர் தொற்று ஏற்பட்டால்,அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். சிலருக்கு கழிவறை போகுவதற்கு முன்பே சிறுநீரை அடக்க முடியாமல் சிறுநீர் கழிப்பது,சிறுநீரின் நிறம் மாறுவது,ரத்தம் கலந்து சிறுநீர் வருவது,சிலருக்கு அரிப்பு உண்டாகுவது போன்ற பல்வேறு அறிகுறிகள் தென்படும்.

இந்த பதிவில் சிறுநீர் தொற்றுக்கான சில வீட்டு வைத்தியத்தை தெரிந்து கொள்ளலாம்.ஆனால் இந்த வீட்டு வைத்தியமானது சிறுநீர் தொற்று ஆரம்ப காலத்தில் இருக்கும்போதே எடுத்துக் கொள்வது.சிறுநீர் தொற்று அதிகமாக உள்ளவர்கள் கண்டிப்பாக மருத்துவரை அணுகுவது அவசியம்.சிறுநீர் தொற்று உள்ளவர்கள் கண்டிப்பாக மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியமாகும் இதனை அலட்சியமாக விட்டு விடக்கூடாது.

சிறுநீர் தொற்று நீங்க சில வீட்டு வைத்தியம்!

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் மோரில் ஒரு ஸ்பூன் வெந்தயம் கலந்து குடித்து வந்தால் சிறுநீர் தொற்று விரைவில் குணமாகும்.

தினமும் இரவில் தூங்குவதற்கு முன்பு ஒரு டம்ளர் காய்ச்சிய பாலில் ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு கலந்து ஒரு மாதம் வரை தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீர் தொற்றிலிருந்து முழுமையாக குணமடையலாம்.

தினமும் காலையில் ஒரு டம்ளர் சூடான நீரில் அரை டீஸ்பூன் அளவிற்கு எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் விரைவில் சிறுநீர் தொற்றிலிருந்து விடுபடலாம்.

Exit mobile version