வைரஸ் காய்ச்சலுக்கு வீட்டு வைத்தியம்! 100% தீர்வு இருக்கு!

0
221
#image_title

வைரஸ் காய்ச்சலுக்கு வீட்டு வைத்தியம்! 100% தீர்வு இருக்கு!

மழை, பனி காலங்களில் வைரஸ் காய்ச்சல் அதிகளவில் பரவக் கூடும். இந்த வைரஸ் காய்ச்சல் பாதிப்பை வீட்டு வைத்தியம் மூலம் குணப்படுத்திக் கொள்ளும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

தேவையான பொருட்கள்:-

சித்தரத்தை – 10 கிராம்

மிளகு – 7

வெற்றிலை – 1

கற்பூரவல்லி – 2

துளசி – 1 கைப்பிடி அளவு

சுக்கு – 1 துண்டு

செய்முறை…

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 10 கிராம் சித்தரத்தை, 1 துண்டு சுக்கு, 1 வெற்றிலை, 1 கைப்படி அளவு துளசி, 7 மிளகு, கற்பூரவல்லி இலை 2 சேர்த்து கொள்ளவும். பின்னர் அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.

15 நிமிடங்களுக்கு கழித்து அடுப்பை அணைத்து பானத்தை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி பருகவும். இந்த பானம் வைரஸ் காய்ச்சலை விரைவில் குணமாக்கும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

*பப்பாளி இலை

செய்முறை…

1/4 கப் அளவு பப்பாளி இலையை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.

இந்த சாற்றை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி கொள்ளவும். அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அதில் பப்பாளி சாற்றை சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

பிறகு இதை 1 கிளாஸுக்கு வடிகட்டி இளஞ்சூட்டில் பருகவும். இவ்வாறு செய்தால் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு சில தினங்களில் குணமாகும்.