Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தோல் நோயை குணமாக்கும் வீட்டு வைத்தியம்!

#image_title

தோல் நோயை குணமாக்கும் வீட்டு வைத்தியம்!

மோசமான காலநிலை மாற்றத்தால் பலரும் தோல் வியாதிகளான தேமலை, அரிப்பு, அலர்ஜி, படர்தாமரை உள்ளிட்ட பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.

இந்த பாதிப்புகள் குணமாக மருந்து பொருட்களை பயன்படுத்துவதை வீட்டு வைத்தியத்தை முயற்சிப்பது நல்ல பலனைக் கொடுக்கும்.

தேவையான பொருட்கள்…

*பூண்டு
*வெற்றிலை
*துளசி

உரலில் ஒரு பல் பூண்டு, 1 வெற்றிலை, 10 துளசி இலைகளை போட்டு இடித்து எடுத்து தோலில் அரிப்பு, தேமல், பூச்சு கடி, சிரங்கு உள்ளிட்ட தோல் நோய்கள் உள்ள இடத்தில் பூசி குளித்து வந்தால் அவை விரைவில் குணமாகும்.

தேவைப்படும் பொருட்கள்…

*தேங்காய் எண்ணெய்
*வசம்பு பொடி

அடுப்பில் தாளிப்பு கரண்டி வைத்து தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பிறகு அதில் 1 ஸ்பூன் வசம்பு பொடி சேர்த்து சிவக்க காய்ச்சி ஆற விடவும். இதை தேமல், அரிப்பு உள்ளிட்ட தோல் வியாதிகள் மீது பூசி வந்தால் விரைவில் குணமாகும்.

தேவைப்படும் பொருட்கள்…

*டேபுள் ரோஸ்

ஒரு டேபிள் ரோஸ் பூவை எடுத்து உடலில் தோல் அரிப்பு, படர்தாமரை, தேமல் உள்ளிட்டவைகள் மீது பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும்.

Exit mobile version