Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரே நாளில் அல்சர் புண்களை குணமப்படுத்தும் வீட்டு வைத்தியம்!! நம்புங்க 100% பலன் உண்டு!!

இக்காலத்தில் உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை முற்றிலும் மாறிவிட்டதால் பலரும் பல்வேறு உடல் உபாதைகளை சந்தித்து வருகின்றனர்.குறிப்பாக உணவை தவிர்ப்பதால் அல்சர்,குடல் பிரச்சனை போன்றவை ஏற்படுகிறது.இந்த அல்சர் பாதிப்பில் இருந்து விடுபட வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யுங்கள்.

அல்சர் ஆரம்ப அறிகுறிகள்:

1)நெஞ்செரிச்சல்
2)வயிறு அசௌகரியம்
3)வயிறு எரிச்சல்
4)வாய்ப்புண்
5)வாந்தி குமட்டல்
6)வயிறு உப்பசம்
7)கருப்பு மலம்
8)ஆசனவாய் எரிச்சல்

தீவிர அல்சர் அறிகுறிகள்:

1)இரத்த வாந்தி
2)அடிக்கடி மயக்கம்
3)உடல் எடை குறைதல்
4)மூச்சுத்திணறல்
5)பசியிழப்பு
6)உடல் சோர்வு

அல்சர் காரணங்கள்:

1)உணவு தவிர்த்தல்
2)குளிர்பானங்கள் அருந்துதல்
3)அதிக காரம் நிறைந்த உணவுகள்
4)புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கம்
5)புளிப்பு உணவுகள்

அல்சர் பாதித்தவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்:

1)காபி,டீ குடிக்க கூடாது
2)மது அருந்த கூடாது
3)பதப்படுத்தபட்ட உணவுகள்
4)சிட்ரஸ் பழங்கள்
5)காரம் மற்றும் புளிப்பு நிறைந்த உணவுகள்
6)அதிக உப்பு உணவுகள்

அல்சருக்கான வீட்டு வைத்தியங்கள்:

தீர்வு 01:

*கற்றாழை துண்டுகள்
*தேன்

முதலில் தேவையான அளவு கற்றாழை துண்டுகளை எடுத்து தோல் நீக்கி கொள்ளுங்கள்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்த கற்றாழை சாறில் சிறிது தேன் கலந்து பருகி வந்தால் வயிற்றில் உள்ள அல்சர் புண்கள் சீக்கிரம் ஆறிவிடும்.

தீர்வு 02:

*வெந்தயம்
*மோர்

குளிர்ச்சி நிறைந்த வெந்தயத்தை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்து ஒரு கிளாஸ் அளவு மோரில் கலந்து பருகி வந்தால் அல்சர் குணமாகும்.

தீர்வு 03:

*ஆளி விதை
*தண்ணீர்

ஒரு தேக்கரண்டி ஆளிவிதையை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் அல்சர் பாதிப்பு குணமாகும்.

தீர்வு 04:

*நெல்லிக்காய்
*தேன்

பெரிய நெல்லிக்காயை விதை நீக்கிவிட்டு மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இந்த நெல்லிக்காய் ஜூஸில் ஒரு தேக்கரண்டி அளவு தேன் சேர்த்து பருகினால் அல்சர் புண்கள் சீக்கிரம் குணமாகிவிடும்.

தீர்வு 05:

*கசகசா
*தேங்காய்

முதலில் ஒரு கப் அளவிற்கு தேங்காய் துருவல் எடுத்து மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இந்த பாலை பாத்திரத்தில் ஊற்றி சூடாக்க வேண்டும்.பிறகு அதில் அரை தேக்கரண்டி கசகசா சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு இதை ஆறவைத்து பருகினால் அல்சர் புண்கள் ஆறிவிடும்.

Exit mobile version