தாங்க முடியாத சொத்தை பல் வலியை மின்னல் வேகத்தில் குணமாக்கும் வீட்டு வைத்தியம்!
தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் பல் துலக்குவது மிகவும் முக்கியமான ஒன்று. இதனால் நம் பற்களில் அடைபட்டு கிடந்த உணவுத் துகள்கள், அழுக்கு கிருமிகள் வெளியேறி பற்கள் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் நாம் முறையாக பல் துலக்காமல் இருத்தல், உணவு உட்கொண்ட பிறகு வாயை சுத்தம் செய்யாமல் இருத்தல் போன்ற காரணங்களால் நல்ல பற்கள் எளிதில் சொத்தையாகி விடுகிறது. இந்த பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்திக் கொள்வது நல்லது.
தேவையான பொருட்கள்:-
*கொய்யா இலை – 10
*புளி – 1 துண்டு
*காட்டன் பஞ்சு – 1
செய்முறை:-
பத்து கொய்யா இலைலகளை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ளவும். இதை உரலில் போட்டு இடிக்கவும். அதனுடன் ஒரு துண்டு புளியை போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
இந்த சாற்றில் சிறு காட்டன் பஞ்சை நினைத்து சொத்தைப்பல் இருக்கும் இடத்தில் வைக்கவும். இவ்வாறு செய்வதினால் சொத்தை பல்லில் ஏற்பட்டுள்ள வலி சில நிமிடங்களில் குணமாகும். சொத்தைப் பல் வலி இருப்பவர்கள் மட்டும் அல்ல இல்லாதவர்களும் கொய்யா இலை மற்றும் புளியை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் பல் சொத்தையாவது தடுக்கப்படும்.