Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குறட்டை பிரச்சனை தொல்லையா? இதை ட்ரை பண்ணுங்க கொர்..கொர்.. ஒழிந்துவிடும்..!

Snoring Remedy in Tamil

Snoring Remedy in Tamil: பெரிய பெரிய வியாதிகளை கூட குணப்படுத்தி விடலாம் போல ஆனால் நமது உடலில் இருக்கும் சின்ன சின்ன பிரச்சனைக்கு நம்மால் சரிசெய்ய முடியாமல் தவித்துக்கொண்டிருப்போம். சிறிய நோயாக தெரிந்தாலும் வாழ்க்கையில் பெரிய அளவு பாதிப்பை கொடுக்க கூடியதாக இருப்பது என்னவென்று பார்த்தால் அது இந்த சின்ன வியாதிகளாக தான் இருக்கும். அப்படி நம்மையும் நிம்மதியாக இருக்க விடாமல், பிறரையும் நிம்மதி இல்லாமல் செய்வது எது என்று பார்த்தால் அது இந்த குறட்டை தான்.

இந்த குறட்டை பிரச்சனையால் குறட்டை விடுபவர்களுக்கு பிரச்சனை உள்ளதோ இல்லையோ, ஆனால் அவர்களுடன் தூங்குபவர்களுக்கு நிச்சயம் இது பெரும் தொந்தரவாக தான் இருக்கும். நம்மூரில் விவாகரத்து வாங்குவதற்கு பெரிய பெரிய காரணங்கள் இருந்தபோதும், வெளிநாடுகளில் விவாகரத்து பெறுவதற்கு முக்கிய காரணம் இந்த குறட்டை தான். குறட்டை விடுபவர்களிடம் இரவில் உங்கள் குறட்டை சத்தத்தால் தூக்கம் இல்லை என்று கூறினால் அதனை நம்பவே மாட்டார்கள். ஏனென்றால் அது அவர்களுக்கே தெரியாது. நாம் இந்த பதிவில் குறட்டை ஏன் வருகிறது? அதனை எப்படி சரி செய்யலாம் என இந்த பதவில் (how to stop snoring in Tamil) பார்க்கலாம்.

குறட்டை

இந்த குறட்டை ஒருவர் தன்னிலை மறந்து உறங்கும் போது வரக்கூடிய கரகரப்பான அல்லது சத்தமான ஒலியாகும். காற்று நம் மூக்கு, வாய், தொண்டை வழியாக நுரையீரலை சென்று அடைகிறது. இவ்வாறு காற்று போகும் பாதியில் தடை ஏற்படுவதன் மூலம், தொண்டை தளவர்வான நேரத்தில் அதன் திசுக்களை கடந்து காற்று செல்லும் போது குறட்டை ஒலி ஏற்படுகிறது.

காரணங்கள்

குறட்டை வருவதற்கான காரணங்கள் என்று பார்த்தால் உடல்பருமன், சைனஸ், தைராய்டு பிரச்சனை, வேறு ஏதேனும் காரணங்களால் தொண்டை பகுதி குறுகி காற்றுச்செல்ல வழியில்லாமல் இருப்பது, தூசி நிறைந்த காற்றை சுவாசிப்பது, தூக்கமின்மை, புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவை குறட்டை ஏற்படுவதற்கு காரணமாக அமையலாம்.

தடுப்பது எப்படி? 

குறட்டையை வீட்டு வைத்தியத்தின் மூலம் தடுக்கலாம் (kurattai treatment in tamil). இதனை நீங்கள் தினசரி செய்து வரும் போது குறட்டை விடும் பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்

மஞ்சள் தூள், ஏலக்காய் இது இரண்டையும் 200 மிலி நீரில் கொதிக்க வைத்து நன்றாக காய்ச்ச வேண்டும். இவை 100மிலி வரும் வரை காய்ச்ச வேண்டும். சூடு ஆறியதும் அதில் 2 ஸ்பூன் தேன் கலந்து குடித்து வர குறட்டை பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக அமையும்.

துளசி மற்றும் புதினா இரண்டையும் தண்ணீரில் போட்டு நன்றாக சுண்ட காய்ச்சிக்கொள்ளவும். வேண்டுமென்றால் இவைகளை அரைத்தும் கொதிக்க வைத்துக்கொள்ளலாம். சூடு ஆறியதும் இதனுடன் தேன் கலந்து குடித்து வர வேண்டும்.

மேலும் இதனுடன் உடல்பருமனாக இருப்பவர்கள் தொண்டையில் கொழுப்பால் கழுத்து பகுதி பெரியதாக இருக்கும். இதனால் குறட்டை ஏற்படும். எனவே உடல்பருமைன குறைக்க முயற்சி எடுக்கலாம்.

மேலும் பிராணயாமம், தனுராசனம், புஜங்காசனம் போன்ற ஆசனங்களை செய்து வருவது நல்லது. மூச்சி இழுத்து விடும் போது சுவாபாதைகள் நன்றாக வேலை செய்யும்.

மேலும் படிக்க: ஒரே நாளில் உங்க தலையில் இருக்கும் பேன் எல்லாம் செத்துவிடும்.. இதை தடவுங்க போதும்..!!

Exit mobile version