Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வெடிப்புள்ள குதிகாலை மென்மையாக மாற்ற இரவில் 10 நிமிடம் இதை செய்யுங்கள்!!

home-remedies-to-soften-cracked-heels

home-remedies-to-soften-cracked-heels

பாதங்களில் உள்ள தோல் வெடிப்புகள் இன்றி மிருதுவாக இருக்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் ஆசை.ஆனால் அதிக நேரம் தண்ணீரில் வேலை செய்தல்,கெமிக்கல் சோப்களை பயன்படுத்துதல் போன்ற காரணங்களால் கால்களில் வெடிப்பு அலர்ஜி ஏற்படுகிறது.

கால் பாதங்களில் உள்ள வெடிப்புகள் மறைந்து தோல்கள் மென்மையாக மாற இந்த அழகு குறிப்புகளில் ஒன்றை தொடர்ந்து பயன்படுத்தி வாருங்கள்.

தேவைப்படும் பொருட்கள்:

1)பால் – ஒரு கப்
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)ரோஸ் வாட்டர் – இரண்டு தேக்கரண்டி
4)மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி

பயன்படுத்தும் முறை:

ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி இரண்டு நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.பிறகு ஒரு அகலமான வாளியில் வெது வெதுப்பான தண்ணீரை ஊற்றி காய்ச்சிய பாலை சேர்க்கவும்.

பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி ரோஸ் வாட்டர் மற்றும் ஒரு தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும்.

அதன் பின்னர் ஒரு தேக்கரண்டி தேனை ஊற்றி நன்கு கலந்துவிடவும்.பிறகு உங்கள் கால் பாதங்களை இந்த நீரில் வைத்து 15 நிமிடங்கள் ஊறவிடவும்.

பிறகு ஒரு பிரஸ் கொண்டு பாத வெடிப்புகளை தேய்க்கவும்.இப்படி செய்தால் பாதத்தில் உள்ள வெடிப்புகள் நாளடைவில் மறைந்துவிடும்.

தேவையான பொருட்கள்:

1)கல் உப்பு – ஒரு தேக்கரண்டி
2)தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி

பயன்படுத்தும் முறை:

அடுப்பில் பாத்திரம் வைத்து முக்கால் பங்கு தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும்.இதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஒரு தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து கால் பாதங்களை வைத்து 10 நிமிடங்கள் ஊறவிடவும்.

பிறகு காட்டன் துணியில் கால்களை துடைத்துவிட்டு சிறிது தேங்காய் எண்ணெயை பாதங்களில் அப்ளை செய்யவும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பாத வெடிப்புகள் முழுமையாக மறைந்துவிடும்.

Exit mobile version