குளிக்கும் போது இதை தேய்த்துக் குளியுங்க! உடல் முழுவதும் வெள்ளையாக பளிச்சுனு மாறுவதைப் பாருங்க!

0
690

குளிக்கும் போது இதை தேய்த்துக் குளியுங்க! உடல் முழுவதும் வெள்ளையாக பளிச்சுனு மாறுவதைப் பாருங்க!

உடல் முழுவதும் அழகாக மிருதுவாக வெள்ளையாக மாற வேண்டும் என்பது அனைவருக்கும் ஒரு ஆசையாக இருக்கும்.ஆனால் நாம் இயற்கையான முறையை தேடி எப்பொழுதும் செல்லத் தயங்குகிறோம்.

அழகு சாதன பொருட்களை வாங்கி அதைப் பயன்படுத்தி மேலும் நம்முடைய முக அழகை நாமே கெடுத்துக் கொள்கிறோம்.அவை அனைத்திலும் வேதிப் பொருட்கள் கலந்துள்ளதால் நம் முகத்தில் மேலும் பலவித பிரச்சினையை ஏற்படுத்திவிடும்.

இப்பொழுது வீட்டில் இருக்கக் கூடிய சிறிய பொருட்களை பயன்படுத்தி எப்படி முக அழகையும் மற்றும் நிறத்தையும் அதிகரிப்பது? என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

1. கசகசா- 3 ஸ்பூன்
2. பச்சரிசி- 2 ஸ்பூன்
3. கடலைப்பருப்பு 2 ஸ்பூன்
4. தயிர்

செய்முறை:

1. முதலில் மிக்ஸியில் கசகசா 3 ஸ்பூன் பச்சரிசி 2 ஸ்பூன் கடலை பருப்பு 2 டீஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து நன்கு பொடிசெய்து கொள்ளவும்.

2. மைய அரைக்க வேண்டும் என்பது அவசியமில்லை.

3. நீங்கள் குளிக்கும் பொழுது இந்த பொடியை இரண்டு ஸ்பூன் எடுத்து தயிருடன் கலந்து உடல் முழுவதும் தேய்த்து குளிக்கலாம் அல்லது முகம் மற்றும் கழுத்திற்கு மட்டும் பயன்படுத்தலாம்.

4. சோப்பு பயன்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் சோப்பை பயன்படுத்தி விட்டு அதன் பிறகு இதனை தேய்த்து குளிக்கலாம்.

5. வாரம் மூன்று முறை நீங்கள் குளிக்கும் போது இந்த பொடியினை பயன்படுத்தி வரும் பொழுது இரண்டு நாட்களிலேயே உங்களது நிறம் மாறுவதை கண்கூடாக காணலாம்.

6. சிறு குழந்தைகளுக்கு இதனை தேய்க்கும் பொழுது காய்ந்த ரோஜா இதழ்களை சேர்த்து தேய்த்து குளிப்பாட்டலாம்.

7. ஆண்கள் முதல் பெண்கள் வரை இந்த பொடியை பயன்படுத்தலாம்.

8. மேலும் அந்தரங்கப் பகுதிகளில் ஏற்படும் கருமையை இது உடனடியாக அகற்றும்.

பியூட்டி பார்லர் அழகு சாதனங்களைப் பயன்படுத்துவதை விட்டுவிட்டு இந்த இயற்கை தீர்வை பயன்படுத்துங்கள் பயன் பெறுங்கள்.