Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முன்நெற்றி முடி உதிர்வு நின்று முடி கருமையாக வளரும் ஒருவாரம் இதை தடவுங்கள்!

முன்நெற்றி முடி உதிர்வு நின்று முடி கருமையாக வளரும் ஒருவாரம் இதை தடவுங்கள்!

இன்றைய இளைஞர்கள் அதிகமாக ஒன்றால் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் அது தலைமுடி பிரச்சனை. இளவயதிலேயே தலைமுடி பிரச்சனை வந்துவிடுகிறது.

அது ஒரு சில ஹார்மோன் குறைபாடுகளால் மற்றும் சத்து குறைவால் தலைமுடி உதிர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.

முன் நெற்றிப் பகுதியில் முடி வேகமாக வளர இந்த முறையை பயன்படுத்தி பாருங்கள்!

தேவையான பொருட்கள்:

1. வெந்தயம் 4 ஸ்பூன்

2. நெல்லிக்காய் பவுடர் ஒரு ஸ்பூன்

3. தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன்.

செய்முறை:

1.முதலில் அடுப்பில் வைத்து அதில் நான்கு ஸ்பூன் வெந்தயத்தை போட்டு மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும்.

2. வறுத்த பின் அதனை மிக்ஸியில் போட்டு மிகவும் பொடியாக அரைத்துக் கொள்ளவும்.

3. இப்பொழுது அந்த பொடியை ஒரு பௌலில் போட்டு அதனுடன் நெல்லிக்காய் பவுடர் 1 ஸ்பூன் அளவு போட்டு கலந்து கொள்ளவும்.நெல்லிக்காய் பவுடர் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் மிகவும் விலை குறைவாக தான் இருக்கும்.

4. இப்பொழுது ஒரு ஸ்பூன் அளவிற்கு தேங்காய் எண்ணெய் அந்த பொடியுடன் கலந்து கொள்ளவும்.

5. இந்த கலவையை நீங்கள் முன் நெற்றியின் மயிர் கால்களில் படும்படி நன்றாக தேய்த்து விடவும்.

6. தலை முழுதும் கூட தேய்கலாம்.

அரை மணி நேரம் ஊற வைத்து அதன் பின் ஷாம்பு கொண்டு தலையை கழுவி விடவும்.

இந்த முறையை தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வர முன் நெற்றியில் முடிகள் வளர்வதை உங்களால் காண முடியும்.

பயன்படுத்தி பயன்பெறுங்கள்!

 

Exit mobile version